13A12 – சைவப் பிரகாசிகை: இரண்டாம் புத்தகம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.குமாரசுவாமிக் குருக்கள், அச்சுவேலி, 3வது பதிப்பு, 1937, 4வது பதிப்பு, விரோதி வருடம் தை 1950. (கொக்குவில்: சோதிடப்பிரகாச யந்திரசாலை).

54 பக்கம், படங்கள், விலை: சதம் 15, அளவு: 17.5 x 11.5 சமீ.

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை மானேசர் சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள சமயக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. விநாயகக் கடவுள் வல்லாளனுக்கு அருள்செய்தது என்பதில் தொடங்கி, பொன்னாலயம் ஈறாக, சைவ சமய அறிவினை வழங்கும், 31 கட்டுரைகளை இது உள்ளடக்கியது. தான் தோன்றியீஸ்வரர், வல்லிபுரக்கோயில், போன்ற இடங்கள் பற்றியும், நகுல முனிவர், மாருதப்பிரவல்லி, மார்க்கண்டேய முனிவர், உபமன்யு முனிவர், புகழ்த்துணை நாயனார், கணம்புல்ல நாயனார், சுசங்கீதன், ஞானப்பிரகாச முனிவர் ஆகியோர் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகள் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3077. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9184).

ஏனைய பதிவுகள்