கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: தமிழ் மொழிக் குழு, பாடவிதான அபிவிருத்தி நிலையம், கல்வி வெளியீட்டுத்திணைக்களம், 3வது பதிப்பு, 1980, 1வது பதிப்பு, 1973, திருத்திய 2வது பதிப்பு, 1979. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(8), 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.
கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத் தமிழ் மொழிக் குழுவினால் திட்டமிட்டெழுதப்பட்ட பாடநூல் இது. இக்குழுவின் தலைவராக செ. வேலாயுதபிள்ளை இயங்கியுள்ளார். கா.ஜெயராஜா, திருமதி ந.சண்முகநாதன், எம்.எஸ்.ஜமால், எஸ்.கே.சௌந்தரராஜா, எஸ்.மௌனகுரு ஆகியோர் நூலாக்கக் குழுவில் பணியாற்றியுள்ளனர். திருத்திய நூற்பதிப்புக் குழுவில் த.கனகரத்தினம், சு.வேலுப்பிள்ளை ஆகியோர் பணியாற்றியுள்ளனர். குருவிகள் கூடுகட்டும் விந்தை, காணாமற் போன குழந்தை, ஹெலன் கெல்லர், கண்ணன் என் சேவகன், வழிகோலிகள் கட்டடங் கட்டுகிறார்கள், விளையாட்டுக்கள், யூரி ககாரின், மாபெரியோன் மாண்புகள், முத்திரை சேகரித்தல், குத்தில காவியம், பூமி, அமுதூ ட்டும் அன்னை, மழை, மார்க்கோ போலோ கண்ட ஈழமும் தமிழகமும், மணிமேகலை, நாட்டார் பாடல்கள், ஒடிசி, நாளை நமக்கொரு காலம், அறிஞர் சித்திலெவ்வை, உழவுத் தொழில், உணவு முறைகள், கூட்டுறவு இயக்கம், பெருஞ்சேரலிரும்பொறை, வாய்மை, ஸோரப்பின் வீரமரணம், குசெலோபாக்கியாநம் ஆகிய தலைப்புகளில் பாடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24755. முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 11405).