13A15 – திருவாசக மணிகள்.

சு.சிவபாதசுந்தரம். கொழும்பு: விவேகானந்த சபை, மேட்டுத் தெரு, மீள் பதிப்பு, 1961, 4வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு மாசி 1934. (கொழும்பு 13: டொமினியன் அச்சகம்).

64 பக்கம், விலை: சதம் 85., அளவு: 17 x 12 சமீ.

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகப் பதிகங்களிலிருந்து தேர்ந்து வெளியிடப்பட்ட இந்நூலை புலோலியூர் சு.சிவபாதசுந்தரனார் தொகுத்து அதற்கான உரையெழுதியுமுள்ளார். இதில் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல் முதலிய மூன்று பதிகங்கள், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை முதலிய ஒன்பது பதிகங்கள், திருக்கோத்தும்பி முதலிய நான்கு பதிகங்கள், திருப்பள்ளியெழுச்சி முதலிய மூன்று பதிகங்கள், கோயிற்றிருப் பதிகம் முதலிய நான்கு பதிகங்கள், அடைக்கலப் பத்து முதலிய எட்டுப் பதிகங்கள், வாழாப் பத்து முதலிய பதினேழு பதிகங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2973. முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 5156)

ஏனைய பதிவுகள்

Book of Ra angeschlossen 2024

Content Wish master $ 1 Kaution | Kartenrisiko: Gewinnverdopplung qua ihr Gamble Zweck Top 2 Angeschlossen Casinos für jedes Book of Ra bzw. Book of

13445 புதிய இலகுபோத முதற் பாலபாடம்.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, 39ஆவது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 44 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கைப் பாடசாலைகளில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுவந்த பிரபல்யமான