13A18 – நலமுடன்.

எஸ்.சிவதாஸ். வவுனியா: வவுனியா மனநலச் சங்கம், மனநலப் பிரிவு, மாவட்டப் பொது வைத்தியசாலை, 4வது திருத்திய பதிப்பு, 2013, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 136 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978-955-0924-01-1.

ஆழிப்பேரலையின் பாதிப்பின் பின்னர் வெளியான உளவளத்துணை நூல். மனநல மருத்துவர் எஸ் சிவதாஸ் எழுதிய இந்நூல் 2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பின்னரான மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அனுபவங்களையும், கண்ட காட்சிகளையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த பராமரிப்புச் சிகிச்சைகளையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் சொல்லப்படுகின்ற அறிவு, தத்துவங்கள், கோட்பாடுகள், உதவும் முறைகள் எல்லாம் பிற அனர்த்த உளமீட்புப் பணிகளுக்கும் பொருந்துவனவாக உள்ளன. அறிமுகம், உளப்பேரதிர்வு, சிக்கலான அவசர நிலைமை, மனநலமும் சமூக ஆதரவும், நெருக்கீட்டினை எதிர்கொள்ளல், தீவிர நெருக்கீட்டு எதிர்த்தாக்கம், நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடுநோய், இழிவிரக்கம், மெய்ப்பாடு, ஏனைய விளைவுகள், பதகளிப்பு, மனச்சோர்வு, உதவும் வழிமுறைகள், உளவளத்துணை, அரங்கச் செயற்பாடு, சாந்த வழிமுறைகள், நிறைவுரை ஆகிய 17 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 4049, 7A22).

ஏனைய பதிவுகள்

14183 இல்லைத் துன்பமே: மூவர் அருளிய திருவைந்தெழுத்துப்பதிகங்கள்.

சோ. சண்முகசுந்தரன். கொழும்பு 6: சோ.சண்முகசுந்தரன், இல.5, மூர் வீதி, வெள்ளவத்தை, 3வது பதிப்பு, வைகாசி 1998. (கொழும்பு 2: கலர் டொட்ஸ், 31/21,டோசன் வீதி). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×11

12167 – முருகன் பாடல்: முதலாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

14880 வாழகம், பொருளாதாரம், சமூகம்.

சீ. டரில் போட் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், “சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

12416 – சிந்தனை (தொகுதி XV, இதழ் 3).

செல்லையா கிருஷ்ணராசா (இதழாசிரியர்), எஸ்.சந்திரசேகரம் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). v, 117

14837 கம்பன் கடலமுதம்.

முருகுப்பிள்ளை சிவநேசன். பருத்தித்துறை: டொக்டர் நீரஜா ஞாபகார்த்த வெளியீடு, வியாபாரி மூலை, 1வது பதிப்பு, மார்ச் 2018. (பருத்தித்துறை: S.P.M. பதிப்பகம்). (4), viii, 150 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5

12392 சிந்தனை: மலர் 5 இதழ் 1&2 (ஜனவரி-ஜுலை 1972).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்), பி.ஏ.ஹ{சைன்மியா (துணைப் பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1972. (கண்டி: நேஷ னல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி). (4), 42