13A18 – நலமுடன்.

எஸ்.சிவதாஸ். வவுனியா: வவுனியா மனநலச் சங்கம், மனநலப் பிரிவு, மாவட்டப் பொது வைத்தியசாலை, 4வது திருத்திய பதிப்பு, 2013, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 136 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978-955-0924-01-1.

ஆழிப்பேரலையின் பாதிப்பின் பின்னர் வெளியான உளவளத்துணை நூல். மனநல மருத்துவர் எஸ் சிவதாஸ் எழுதிய இந்நூல் 2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பின்னரான மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அனுபவங்களையும், கண்ட காட்சிகளையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த பராமரிப்புச் சிகிச்சைகளையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் சொல்லப்படுகின்ற அறிவு, தத்துவங்கள், கோட்பாடுகள், உதவும் முறைகள் எல்லாம் பிற அனர்த்த உளமீட்புப் பணிகளுக்கும் பொருந்துவனவாக உள்ளன. அறிமுகம், உளப்பேரதிர்வு, சிக்கலான அவசர நிலைமை, மனநலமும் சமூக ஆதரவும், நெருக்கீட்டினை எதிர்கொள்ளல், தீவிர நெருக்கீட்டு எதிர்த்தாக்கம், நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடுநோய், இழிவிரக்கம், மெய்ப்பாடு, ஏனைய விளைவுகள், பதகளிப்பு, மனச்சோர்வு, உதவும் வழிமுறைகள், உளவளத்துணை, அரங்கச் செயற்பாடு, சாந்த வழிமுறைகள், நிறைவுரை ஆகிய 17 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 4049, 7A22).

ஏனைய பதிவுகள்

Free online Roulette

Posts No deposit 100 percent free Chips The new No deposit Gambling enterprise Incentives And you may Totally free Revolves Within the April 2024 A

17970 காலம் அரித்திடாத மூலம் காத்திடுவோம்.

ஜொனியன்ஸ் கூட்டமைப்பு. பிரான்ஸ்: Federation Johnions, 20 Avenue Des Acacias, 93600, Aulny-Sous-Bois, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 250 பக்கம், புகைப்படங்கள்,