கா.மாயாண்டி பாரதி. கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,248, 1/1 காலி வீதி, 4வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, ஜுலை 1955, 2வது பதிப்பு, 1957, 3வது பதிப்பு, 1962. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 147 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5 x 14.5 சமீ.
தமிழ்நாடு, பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரி, தமிழ் விரிவுரையாளரான வித்துவான் கா.மாயாண்டி பாரதி அவர்கள், ஈழத்து நல்லூர் ஆறுமுக நாவலர் பற்றி எழுதிய நூல் இது. தோற்றுவாய், குலச் சிறப்பும் பெருமான் பிறப்பும், கல்வி வேட்கையும் இளமை வாழ்க்கையும், இரு பெரும் பணிகள், உரையாசிரியரும் பதிப்பாசிரியரும், சொல்லின் செல்வர், குணக்கலைக் குன்று, பிறவாப் பெருநிலை ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 7993).