13A24 – பெருங்காப்பியம் பத்துப் பற்றிய காப்பியச் சொற்பொழிவுகள்.

எஸ்.பொன்னுத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1965. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு).

104 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21.5 x 14 சமீ.

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. பெருங்காப்பியங்களை ஐந்தாகப் பகுப்பது தமிழ் மரபு. பின்னாளில் எஞ்சிய காப்பியங்களான பெரிய புராணம், கம்பரா மாயணம், சீறாப்புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் ஆகியவற்றையும் சேர்த்துப் பெருங்காப்பியம் பத்து என்கிறார் எஸ்.பொ. இக்காப்பியங்கள் பத்தையும் பற்றிப் பல்வேறு தமிழறிஞர்கள் வழங்கிய அரிய கருத்துக்களைத் தொகுத்து எழுதப்பெற்ற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்நூலாகும். அறிஞர் எப். எக்ஸ்.சி.நடராசாவும் இத்தொகுப்புக்குப் பங்களிப்பைச் செய்துள்ளார். காப்பியங்கள் மீது எஸ்.பொ விற்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாடு இந்நூலில் புலப்படுகின்றது. ஆய்வாளர்களுக்கும் தமிழ் ஆர்வவலர்களுக்கும் அரிய பொக்கிஷம். இது பத்தாவது அரசு வெளியீடாக வெளிவந்துள்ளது. (பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 0341. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 2569).

ஏனைய பதிவுகள்

14614 திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்.

சேரன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை: 600017: சுதர்சன் கிராப்பிக்ஸ்). 112 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISBN:

14254 சமூக அறிவு: தொகுதி 2,இதழ் 1/2 – ஆடி 2005.

வி.நித்தியானந்தம் (பிரதம ஆசிரியர்), கணேசலிங்கன் குமரன் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½இ டாம் வீதி, 1வது பதிப்பு, ஆடி 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம்,

12792 – தமிழழகி: ஐந்தாவது வீரமாமுனிவர் காண்டம்.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி,

Onlyfans Model Search – OnlyFans Site

Very best OnlyFans Nudes Credit accounts of 2023 OnlyFans has easily grown to get probably the most popular and traditionally used membership providers (notably for

14417 நடைமுறைத் தமிழ் வழிகாட்டி: அகரமுதலி.

தமிழ் வளர்ச்சிக் கழகம். இலங்கை: தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, மே 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 59 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 20×14.5