13A29 – மொழிபெயர்ப்பு நுட்பம்: ஓர் அறிமுகம்.

இ.முருகையன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 154 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-659-381-5.

எல்லோரும் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில், இந்நூலில் மொழிபெயர்ப்பு தொடர்பான இலகுவான அடிப்படைக் கூறுகள் படிப்படியாகத் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன. அதன்பொருட்டு பரும்படியான எடுத்துக்காட்டுக்களின் உதவியுடன் பொதுமதியின் பாற்பட்ட சிந்தனைகளோடு தொடங்கினாலும், உளவியல், கல்வியியல், மொழியியல், இலக்கியம், இலக்கணம் சார்ந்த ஏனைய கூறுகளையும் மெல்ல மெல்ல இணைத்து மொழிபெயர்ப்பு நுட்பங்களை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. மொழியியல் சார்ந்த கற்கை நெறிகளிற் பயிலும் முதற்பட்ட மாணவர்களுக்கும், இதழியல், வானொலி, தொலைக்காட்சி என்பவற்றுடன் தொடர்புடைய ஊடகவியலாளருக்கும் அரசு-தனியார்துறை மொழிபெயர்ப் பாளருக்கும் ஏற்ற நூல். விளக்கங்களும் வரைவிலக்கணங்களும், வழிமுறைகளும் மாதிரியுருக்களும், அமைப்புகளின் ஒப்பீடு, சொல்லும் பொருளும், மரபுத் தொடர்கள் எனப்படும் ஆகுமொழிகள், மொழியில் நிகழும் மாற்றங்கள், கலைச்சொல் ஆக்கம், கவிதை மொழிபெயர்ப்பு, பன்மொழிப் பயில்வு ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாகத் தமிழ் மொழிபெயர்ப்பின் தொடக்கங்கள் என்ற கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 2281).

ஏனைய பதிவுகள்