13A30 – யாழ்ப்பாண இராச்சியம்.

சி.க.சிற்றம்பலம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், முதுநிலைப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 2வது பதிப்பு, 2006, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½, டாம் வீதி).

xvi, 336 பக்கம், 20 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

கி.பி. 16ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் (கி.பி.1505) போர்த்துக்கேயர் ஈழத்திற்கு வந்தபோது இங்கே மூன்று அரசுகள் காணப்பட்டன. அவை யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி அரசுகள் எனப் பெயர்பெற்றிருந்தன. கோட்டை, கண்டி அரசுகளைப் போலன்றி யாழ்ப்பாண அரசுக்கு நீண்டதொரு அரசியற் பின்னணி முன்னைய பதிவுகள் பின்னிணைப்பு 584 நூல் தேட்டம் – தொகுதி 13 இருந்தது. கி.பி.13ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில் எழுச்சிபெற்ற இவ்வரசு கி.பி.17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி.1619) போர்த்துக்கேயரிடம் போர் முனையில் தன் சுதந்திரத்தை இழந்தது. இக்காலப்பகுதிக்குரிய இவ்வரசின் வரலாறு இந்நூலின் கருப்பொருளாகின்றது. வரலாற்று அறிமுகம் (சி.க.சிற்றம்பலம்), வரலாற்று மூலங்கள் (வி.சிவசாமி), ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (சி.பத்மநாதன்), யாழ்ப்பாண மன்னர்களும் போர்த்துக்கேயரும் (திருமதி சோ.கிருஷ்ணகுமார்), தொல்லியற் கருவூலங்கள் (ப.புஷ்பரட்ணம்), ஆட்சிமுறை (சி.பத்மநாதன்), சமூகம் (சி.க.சிற்றம்பலம்), சமயம் (சி.க.சிற்றம்பலம்), பண்பாடு (வி.சிவசாமி), சிற்பம் (செ.கிருஷ்ணராஜா), நாணயம் (சி.பத்மநாதன்) ஆகிய 11 கட்டுரைகளின் வாயிலாக இந்நூல் முழுமைபெற்றுள்ளது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 2960).

பதின்மூன்றாம் தொகுதி முற்றிற்று

ஏனைய பதிவுகள்

14462 சுகமான விடியலை நோக்கி.

தொகுப்பாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நீரிழிவு சிகிச்சை நிலையம், போதனா வைத்தியசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). (12), 361 பக்கம், விலை: ரூபா 250.00,

14611 சொல்லோவியம்(கவிதை நூல்).

ஏ.எஸ்.சற்குணராஜா. யாழ்ப்பாணம்: தணிகா நுண்கலைக் கல்லூரி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (பருத்தித்துறை: SPM பிறின்டர்ஸ், வி.எம். வீதி). xiv, 86 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN:

14098 வட்டுக்கோட்டை அடைக்கலந்தோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் ; வரலாறும் ; பிரபந்தங்களும்.

நவறாஜினி சண்முகம் (தொகுப்பாசிரியர்). வட்டுக்கோட்டை: செல்வி நவறாஜினி சண்முகம், கள்ளி வீதி, வட்டு. தென்மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 54 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14659 விரல்சூப்பி.

ப.கனகேஸ்வரன் (புனைபெயர்: கே.ஜி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 85 பக்கம், விலை: ரூபா 150.,

13030 நேரலை பத்திரிகையியல் ஓர் அறிமுகம்.

அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர், இல.891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (யாழ்ப்பாணம்: தாயகம் டிஜிட்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகில், திருநெல்வேலி).(14), 282 பக்கம், விளக்கப்படங்கள்,

12839 – திருக்குறள் நெறியில் இலக்கியச் சிந்தனைகள்.

நா.நல்லதம்பி. சாவகச்சேரி: நா.நல்லதம்பி, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (கொழும்பு 11: அனுஷ் பிரின்டர்ஸ்). xiv, 153 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19 x 12.5 சமீ. தென்மராட்சி-