14003 இலகு தமிழில் HTML.

வே.நவமோகன் (புனைபெயர்: கணினிப்பித்தன்). தெகிவளை: வெப் இன்டர்நெஷனல், இல. 7/3, ரூபன் பீரிஸ் மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்,). 68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 22 x14.5சமீ., ISBN: 955-97518-9-1. கணினி உலகில் இணையப் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் HTML மொழியை இந்நூல் எளிமையாக அறிமுகம் செய்கின்றது. தினகரன் வாரமஞ்சரியில் தொடர்ச்சியாக பிரசுரமாகிவந்த இலகு தமிழில் HTML என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடரின் தொகுத்த நூல்வடிவம் இதுவாகும். HTML இன் ஆரம்பப் பதிப்பு HTML 1.0 ஆகும். பின்னர் வந்த திருத்தப்பட்ட பதிப்புக்களின் வாயிலாக விருத்தி கண்ட HTML 4.0 பயன்படுத்தப்பட்ட வேளையில் இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருந்தன. எனவே HTML 4.0ஐ அடிப்படையாகக் கொண்டு HTML இல் உள்ள அடிப்படை விடயங்கள் அனைத்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 35671).

ஏனைய பதிவுகள்

13259 வேலணை மேற்கூர் முடிப்பிள்ளையார் பிள்ளைத் தமிழ்.

வைகுந்தம் கணேசபிள்ளை. வேலணை: பழனிநாதன் ஆரூரன், வேலணை மேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (யாழ்ப்பாணம்: கஜன் பிரின்டர்ஸ், கோண்டாவில்). xiv, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. வேலணை மேற்கு

12240 – சைப்பிரஸ் மற்றும் சூடான்: அவர்களது சமாதானத்தின் இரு உதாரணங்கள்.

நியமுவா வெளியீடு. கொழும்பு 10: நியமுவா வெளியீட்டகம், மக்கள் விடுதலை முன்னணி, 198/19, பஞ்சிக்காவத்தை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (புறக்கோட்டை: ஆர்.சீ. பிரின்டர்ஸ், அன்ட் பப்ளிஷர்ஸ், 70, மிஷன் வீதி). 110