14012 நிகர்: சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011: சிறப்பிதழ்.

அ.லெட்சுமணன் (ஆசிரியர்), வே.தினகரன் (உதவி ஆசிரியர்). நாவலப்பிட்டி: நிகர் வெளியீடு, 83, கொத்மலை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (நாவலப்பிட்டி: ராஜா அச்சகம்). 98 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X15 சமீ. நிகர் நோக்கிய (ஆசிரியர் தலையங்கம்), சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி (லெ.முருகபூபதி), உலக தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க இலங்கைக் கிளை செயலாளர் அந்தனி ஜீவா அவர்களின் வாழ்த்துச் செய்தி (அந்தனி ஜீவா), சர்வதேச தேயிலை தினம் வரலாற்றுப் பின்னணி (ஓ.ஏ. இராமையா), சிறுகதைகள் (காலத்தின் கட்டளை/ செ.தமிழ்ச்செல்வன், தப்பாட்டம்/ மல்லிகை சி. குமார், புதிய சந்தா/ பெ.லோகேஸ்வரன்), சிங்கள இலக்கிய மறுமலர்ச்சியின் பின்னணியில் மார்டின் விக்கிரமசிங்க (க.முரளிதரன்), தமிழ் வீறு நாம் பெற வேண்டும் (அ.வைத்தியலிங்கம்), கவிதைகள் (தேசியம்/ அருணா, தாய்த் திருநாட்டுக்கு/ பெ.தினகரன், முழக்கமிடு/ ச.சத்தியநாதன், பிரட்டுக்கு வராத பிராதுகள்/ சிவனு மனோஹரன்), மனித நேயம் வேண்டி (பி.திருநாவுக்கரசு), இளமையின் கீதம்: சீன பழைமை சமூகத்தை எதிர்த்து போரிட்ட ஒரு இளம் பெண்ணின் கதை (லெனின் மதிவானம்), மலையக மக்களும் – தேசிய இனத்துவ ஜனநாயக – மனித உரிமை மறுப்புக்களும் (அ.லோறன்ஸ்), நாம் இந்திய வம்சாவளியினரா மலையக மக்களா? (சி.சிவகுமாரன்), தமிழர் பண்பாட்டு கலைகளின் இன்றைய போக்கு (வே.இராமர்) ஆகிய படைப்பாக்கங்களை இச்சிறப்பு மலர் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

‎‎real money Local casino Betting To the App Shop/h1>

14695 சுவர்க்கத்து நறுமணம்: சிறுகதைகள்.

எம்.எம்.ஹிதாயத்துள்ளாஹ். பண்டாரகம: எம்.எம்.ஹிதாயத்துள்ளாஹ், அப்ழல் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). viii, 118 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22.5×16 சமீ.,

14003 இலகு தமிழில் HTML.

வே.நவமோகன் (புனைபெயர்: கணினிப்பித்தன்). தெகிவளை: வெப் இன்டர்நெஷனல், இல. 7/3, ரூபன் பீரிஸ் மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்,). 68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100.,