ஐபீ.சீ. தமிழ். யாழ்ப்பாணம்: நிராஜ் டேவிட், நிறைவேற்றுப் பணிப்பாளர், ஐ.பீ.சீ. தமிழ், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: பிரகபி கிராபிக் டிசைனர்ஸ், இல. 1219, காங்கேசன்துறை வீதி, பூநாறி மடம்). xvi 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. ஐ.பீ.சீ. தமிழ் ஊடகத்தினரால் 2019இல் யாழ்ப்பாணத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட முதலாவது சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பிதழ். பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகளுடன் விருதுகளைப் பெறும் சாதனையாளர்களைப் பற்றிய ஒரு பக்க அறிமுகக் குறிப்புகள் அவர்களது புகைப்படங்களுடன் இம்மலரில் தொகுக்கப்பெற்றுள்ளன. இசைவாணர் எம். கண்ணன், தமிழ்க் கவி (தமயந்தி சிவசுந்தரலிங்கம்), கோகிலா மகேந்திரன், நவரத்தினம் கேசவராஜன், வெற்றிச் செல்வி, புதுவை அன்பன், சண்.யோகரத்தினம் (ராதேயன்), அபயன் கணேஷ், தர்சினி சிவலிங்கம், சி.மௌனகுரு, பண்டாரம் சின்னராசா, ஆசை இராசையா, பார்வதி சிவபாதம், அருணா செல்லத்துரை, ஓ.கே.குணநாதன், வைரமுத்து தர்மகுலநாதன், இரத்தினம் சிவலிங்கம், சிவராஜதேவா விஜயதுஷ்யந்தன், செல்லப்பிள்ளை ஜெயராசா, வல்லிபுரம் கானமயில்நாதன், சாந்தினி சிவநேசன், ராஜேஸ்வரி தெட்சணாமூர்த்தி, குழந்தை செபமாலை, கந்தப்பிள்ளை சின்னத்தம்பி, வெள்ளையன் சுப்ரமணியம், கோதண்டபாணி பஞ்சரத்தினம், சுப்பிரமணியம் பத்மநாதன், பரமு புஷ்பரத்தினம், நா.யோகேந்திரநாதன், சிவசுப்பிரமணியம் (ரமணி), செபஸ்தியாம்பிள்ளை ஜோசப் பாலா, சண்முகரட்ணம் இரட்ணவேல், இராசு புண்ணியமூர்த்தி, ஏ.ஜோசப் (அருளானன்), சுப்பிரமணியம் லோகநாதன், குழந்தை ம.சண்முகலிங்கம், எபனேசர் நேசராஜ் உவொட்ஸ்வேர்த், வண.ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை, இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன், முருகன் மோகன்ராஜ், கி.ரவிச்சந்திரன் (கருணை ரவி), கோகுலன் (நடராசா இராமநாதன்), நமசிவாயம் விஜயரத்தினம் (மணலாறு விஜயன்), நா.தர்மராசா (அகளங்கன்), தங்கமுத்து சத்தியமூர்த்தி, வண. நிக்கலாஸ் பிள்ளை மரிய சேவியர் அடிகள், பசுமை இயக்கம்- திருகோணமலை, உதுமாலெப்பை முகம்மது அதீக் (சோலைக்கிளி), ஜின்னா ஷரிபுத்தீன், மா.இரத்தினசோதி ஆகிய கலை இலக்கிய அறிவியல் ஆளுமைகள் விருதுகளைப் பெற்றிருந்தனர்.
Best 100 percent free Spins Casinos August 2024 No deposit Harbors
Posts 100 percent free Spins Deposit Incentives | mermaids millions free spins 150 How do Totally free Revolves No deposit Bonuses Functions? Conditions and terms