ஆர். பாரதி. கொழும்பு 5: இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, 96, கிருல்ல வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 X 15.5 சமீ. பத்திரிகை ஆசிரியர்களுக்கான தொழில்சார் நடைமுறைக்கோவை (ஒழுக்கக் கோவை) இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் நடைமுறையும் நியமங்களும், ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் தொடர்பான கொழும்புப் பிரகடனம் மற்றும் அது தொடர்பான விடயங்களும் அடங்கிய கையேட்டுப் பிரதியாகும். பத்திரிகையாளர்களின் நாளாந்தத் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் பிரயோசனமான ஒரு உசாத்துணை நூல். 1998இன் கொழும்புப் பிரகடனத் தினூடாக இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவே பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் பத்திரிகையாளர்களுக்கான சுயகட்டுப்பாட்டுப் பொறிமுறையான ஒழுக்கக் கோவையையும் நடைமுறைப் படுத்துகின்றது. கொழும்புப் பிரகடனம் மீளாய்வு செய்யப்பட்ட 2008இல் திருத்தப்பட்டவேளை பத்திரிகை ஆசிரியர் சங்க ஒழுக்கக் கோவையும் திருத்தி எழுதப்பட்டது. அவ்வாறு திருத்தி இற்றைப்படுத்தப்பட்ட பதிப்பே இக்கையேடாகும்.
12288 – இலங்கையில் 8ஆம் 10ஆந்தர மாணவரின் அடைவு பற்றிய தேசிய கணிப்பீடு: தேசிய அறிக்கை.
லால் பெரேரா, சுவர்ணா விஜயதுங்க, ஏ.ஏ.நவரட்ண, எம்.கருணாநிதி. கொழும்பு 3: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு நிலையம், NEREC, கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2007. (அச்சக விபரம்