14023 உலகெலாம் ;

மட்டுநகர் ராகுல் நாயுடு (இயற்பெயர்: நல்லசாமி பிரதீபன்). மட்டக்களப்பு: நல்லசாமி பிரதீபன், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஜுன் 2014. (மட்டக்களப்பு: Talent Advertising Marketing). xxvi, 125 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 490., அளவு: 20.5 x 15 சமீ., ISBN: 978-955-41303-0-2. ‘’மதங்களை மதிப்போம், மதவெறியினைத் தவிர்ப்போம், புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தாரக மந்திரத்துடன் விரியும் இந்நூல் உலகில் மனிதன் பதிலைத் தேடுகிறான், வழிபாடு, கடவுள், சமயங்கள், மனிதன், கர்மம், விஞ்ஞானமும் மெய்ஞானமும், பிரபஞ்சமும் கொள்கைகளும், உணவு, அறிவு, அன்பே தியானம், உலகெலாம் ஆகிய இயல்களில் எழுதப்பட்டுள்ளது. மனிதர்கள் இனம், மதம், மொழி என்று பிளவுண்டு திசைக்கொன்றாகி நிற்கும் வேளையில் இந்நூலானது வாசகர் மனதில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே என்ற கருத்தை வலியுறுத்துவதே ஆசிரியரின் நோக்கமாகின்றது. நூலைப்பற்றி தனது கருத்துரையில் திருமந்திரம், தம்மபதம், பைபிள், திருக்குர் ஆன், பகவத்கீதை, சித்தர்கள் பாடல் என்பவற்றில் இருந்து வாசகர்களுக்காக எடுத்துக் காட்டி உள்ளதாகக் கூறியுள்ளார். நாம் தேடும் அந்தப் பொருள் கருவில் கூடியிருந்தது. அதை நம்மில் பலர் கழித்து விடுவதனால் உண்மையை உணராமல் தவிக்கிறோம். அதைப் பெருக்கி விடுபவர்கள் உண்மையை உணர்ந்தவராவர். இதனை இஸ்லாம் அவர் மறுமை வீட்டைத் தேடிக்கொண்டவர் எனவும், கிறிஸ்தவம் அவர் மரணத்தை விட்டு நித்திய ஜீவனுக்கு உட்பிரவேசிக்கின்றார் எனவும், பௌத்தம் பரிநிர்வாணம் அடைந்து விட்டார் எனவும், சனாதன தர்மம் மோட்சம் அல்லது சிவமாகிவிட்டார் எனவும் எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் இலக்கும் தன்னை உணர்ந்து சமயங்களின் புனித நூல்கள் விபரிக்கும் பரிசுத்தமான நிலையை அடைவதேயாகும். இதுவே மனித வாழ்வின் இறுதி இலக்காக இருக்கவேண்டும் என்பதும் நூலாசிரியரின் கருத்தாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61340).

ஏனைய பதிவுகள்

14219 தோத்திரத் திரட்டு.

வெளியீட்டுக் குழு. மன்னார்: மகா சிவராத்திரி மட பரிபாலன சபை, திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, திருக்கேதீச்சரம், 1வது பதிப்பு, மார்ச் 2003. (மன்னார்: பிரான்சிஸ் அச்சகம்). (8), 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,