14025 தமிழர் உளவியலும் உளவளத் துணையும்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park ). viii, 124 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978-955-685-142-7. பேராசிரியர் சபா. ஜெயராசா தமிழில் ’கல்வியியல்”, ‘சீர்மியம்” உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். இந்நூலில் உளவளத்துணையும் தமிழ்ச் சூழலும், சங்கப் பாடல்களில் சீர்மியச் செய்திகள், மனவளத்தில் தொன்மங்களும் சடங்குகளும், தமிழர் இசையும் உளவளத்துணையும், தமிழர் நாடகமும் உளவளத்துணையும், விளையாட்டுக்கள் வாயிலாக உளச்சுகம் பெறல், குறளில் மேலெழும் சீர்மியக் கருத்துக்கள், சிலப்பதிகாரமும் சமூக மனமும் உளவெளியும், பக்தி இலக்கியங்களும் சீர்மியமும், காவியங்களும் மனச்சுகம் பெறுதலும், சீர்மியமும் இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களும் மனச்சுமை விடுவிப்பும், இசை கலந்து கதை சொல்லல், சீர்மிய நடவடிக்கையாக ஓவியம், சித்தர் பாடல்களும் விளிம்பு நிலையினரது உணர்வுகளும், நாட்டார் பாடல்களின் உளவியற் பரிமாணங்கள், நாட்டார் கதைகளும் உளவியலும், நெருப்புச் சட்டிக் கதைகளும் சீர்மியமும், மனத்தை முகாமை செய்தல், உளவியற் சிகிச்சை முறைமையின் தோல்வி, உளநலத்தின் சமூகத்தளம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 21 கட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65002).

ஏனைய பதிவுகள்

14243 இஸ்லாத்தின் வழியில் பெண்கள் சுத்தம்.

செய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமின் (மூலம்), ஸாலிஹ் அஸ்.ஸாலிஹ் (ஆங்கில மொழிபெயர்ப்பு), எஸ். எம்.மன்சூர் (தமிழாக்கம்). சவூதி அரேபியா: I.P.C.Islam Presentation Committee, P.O.Box 1613, Safat 13017, 1வது பதிப்பு,

14293 சீனாவுக்கான அமைதிவழி அபிவிருத்தியும் அதன் இரகசியமும்.

ஏ.சீ.எம். இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

14225 பஜனை பாடல்கள்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், நீர்வேலி). v, 170 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×15

12045 – இந்து பாரம்பரியம்.

வனஜா தவயோகராஜா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 3: கொழும்பு மகளிர் இந்துமன்றம், 15, பகதல வீதி, 2வது தமிழ்ப் பதிப்பு, 2005, 1வது ஆங்கிலப் பதிப்பு, 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால்

Mostbet, Falsztyn Opinie, Kontak

Mostbet, Falsztyn Opinie, Kontakt Program bonusowy MostBet małe sekrety, które pomogą Ci wygrać więcej Content STRONY OAZOWE Jak grać w kasynie Mostbet? razy z “powodów