14026 புறங்கைச் சுமை: கட்டுரைகள்.

ராணி சீதரன். தெகிவளை: ராணி சீதரன், 26/111, வைத்தியா வீதி, 2வது பதிப்பு, மார்ச் 2019, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (தெகிவளை: tg Printers). viii, 131 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-97102-5-7. தினக்குரல் பத்திரிகையில் 2011இல் ’வாழ்ந்து பார்க்கலாம்” என்ற தொடராக வெளிவந்த வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஆண் வயதுக்கு வந்து விட்டால், தோளுக்கு மிஞ்சினால் தோழன், ஏன் இந்த இடைவெளி? வாசிப்பும் ஆக்கத்திறனும், இருவர் நினைவும் ஒன்றானால், குடும்பத்திலே எழும் குழப்பங்கள், மாமியாரும் ஒரு தாய்தானே, பெண் ஏன் அடக்கப்பட்டாள்? வலிமை பெற வேண்டிய பெண் அடையாளம், மாற்றமுறும் காலச்சக்கரம், சமூக மனப்பாங்கில் பெண், உணர்வு வெளிப்படுத்தலும் பெண்களும், வாழ்வும் வலிகளும், மனம் விசித்திரமானது, மனிதா நீ எங்கே, முதுமையும் தனிமையும், கல்வி உலகினிலே, கல்யாணச் சந்தையிலே, பெண்ணின் கனவுகளும் வாழ்வும், விதவை என்றால் துறவியா? நீதி வெண்பா கூறும் பெண்ணுக்குரிய நீதி, மனம் சாய்ந்து போனால் ஆகிய 22 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்