14027 இடைநிலை அளவையியல்.

ஜேம்ஸ் வெல்டன், A.J.மொனகன் (ஆங்கில மூலம்), S.H, மெலோன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,58, சேர். ஏர்னஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xx, 522 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இந்நூல் Intermediate Logic என்ற தலைப்பில், James Welton , A.J.Monahan ஆகிய இருவரும் இணைந்து எழுதி லண்டன் University Tutorial Press Ltd நிறுவனத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம். அளவையியல் இயல்பு, எண்ண விதிகள், பதங்கள், பதார்த்தங்களும் பயனிலைத் தகவுகளும், வரைவிலக்கணம், வரைவிலக்கணப் போலி, பிரிப்பும் வகையீடும், எடுப்புக்களின் வரைவிலக்கணமும் வகையீடும், தீர்மானத்தால் எழும் போலிகள், உடன் அனுமானம் பற்றிய பொதுவான குறிப்புகள், எடுப்பு முரண்பாடு, வெளிப்பேறு, உடன் அனுமானத்தின் போலிகள், நியாயத்தொடையின் பொது இயல்பு, நியாயத்தொடைவழி அனுமானத்தின் தத்துவமும் விதிகளும், உருவும் பீரகாரமும், நியாயத்தொடைகளின் இனமாற்றம், கலப்பு நியாயத்தொடைகள், சுருக்க நியாயத்தொடைகளும் இணைப்பு நியாயத்தொடைகளும், நியாயத்தொடையின் பயன் வலிமை என்பனவும் குறைபாடுகளும், பொது அறிமுறை, விசேட முறைகள், தருக்கநெறியில் போலிகள், தொகுத்தறிவின் பொது இயல்பு, தொகுத்தறி முறையின் இடுகோள்கள், நோக்கல், சான்று, கருதுகோளின் இயல்பு, கருதுகோள்களின் தோற்றம், கருதுகோள் நிலைநாட்டல், தொகுத்தறிமுறை உதாரணங்கள், கணியமுறைத் துணிபு, விஞ்ஞான விளக்கம் ஆகிய 33 இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25248).

ஏனைய பதிவுகள்

Tx Teas Casino slot games

Blogs Pragmatic Gamble Slots High quality Tips Claim Your own Totally free Spins Incentive Totally free Las vegas Ports At your fingertips And this Video