ஞாபகார்த்த மலர்க் குழு. யாழ்ப்பாணம்: திருமதி இராசலிங்கம் அன்னபூரணம் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. 4.4.2006 அன்று வெளியிடப்பெற்ற இந்நினைவு மலரில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி ஆகிய நீதிநூல்கள் மீள்பிரசுரமாகி யிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38263).
14836 கண்ணகி கற்பு அல்லது வினைச் சிலம்பால் விளைந்த கதை.
தொல்புரக்கிழார் (இயற்பெயர்: நா.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: நா.சிவபாதசுந்தரன், தமிழ் நிலை, தொல்புரம், 1வது பதிப்பு, 1955. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி). iv, (8), 56 பக்கம், விலை: 75 சதம், அளவு: