க.சற்குணேஸ்வரன். மட்டக்களப்பு: இராமகிருஷ்ண மிஷன், சிவானந்த வித்தியாலயம், கல்லடி-உப்போடை, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (மட்டக்களப்பு: கீன் அச்சகம்). (14), 36 பக்கம், தகடுகள், விலை: ரூபா 15.00, அளவு: 18×12 சமீ. நூலாசிரியரான இம்மாணவர், மட்டக்களப்பு- திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலய ஆசிரியர் கந்தப்பன் அவர்களின் மகனாவார். இந்து மதம் தந்த துறவிகளுள் ஒருவரான சுவாமி விவேகானந்தர் அருளிய பொன்மொழிகளைச் சேர்த்துத் தொகுத்து இந்நூலை இவர் வெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14741).