14033 திருக்குறள்.

திருவள்ளுவர் (மூலம்), மு.வரதராசனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 739 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 9×5 சமீ. ஏட்டுவடிவில் அகலப் பாங்கில் அச்சிடப்பட்டுள்ள இத் திருக்குறள் நூல், திருக்குறள் தேசிய வாரத்தினை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருக்குறள் பெருவிழா இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி அவர்களினால் 30.08.2019 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. திருக்குறள் பெருவிழா நிறைவேற்றுக் குழுவில் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. இ.இளங்கோவன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் ஆகியோர் பங்காற்றியிருந்தனர்.

ஏனைய பதிவுகள்

14885 கேரள டயரீஸ்-1: வேர் தேடுவோம்.

அருளினியன். சென்னை: Stoicdale Publishers, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600042: ஜீவா பதிப்பகம், வேளாச்சேரி). 162 பக்கம், விலை: ரூபா 450., இந்திய ரூபா 230., அளவு: 22×14.5 சமீ. யாழ்ப்பாணம்,

12853 – இஸ்லாமும் கவிதையும்.

எஸ்.எச்.ஆதம்பாவா. சாய்ந்தமருது 4: கலமுஷ்-ஷர்க் வெளியீடு, ‘வரித மஹால்’, 1வது பதிப்பு, ஜுன் 1987. (கல்முனை: அஸீஸ் பிரின்டிங்). (16), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 12.5 சமீ. அல்-ஹாஜ்

14511 சோனக அரங்கு: உரையாடல்.

A.B.M .இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). வாழைச்சேனை 05: காகம் (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்) வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 127 பக்கம்,

12991 – அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு: நாகர்காலத்துப் புராதன தொல்பொருட் சின்னங்கள்.

அருணா செல்லத்துரை. வவுனியா: அருணா வெளியீட்டகம், எண் 68, வைரவர் கோவில் வீதி, வைரவர் புளியங்குளம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxiv, 151

12546 – கன்னித் தமிழ் வாசகம் இரண்டாம் புத்தகம்: 7ம் வகுப்பு.

வ.கி.இம்மானுவேல். கொழும்பு: வ.கி.இம்மானுவேல், 3வது பதிப்பு, 1963, 1வது பதிப்பு, டிசம்பர் 1957. (அச்சக விபரம் தரப்படவில்லை). 132 பக்கம், விலை: ரூபா 2.15, அளவு: 19.5×14.5 சமீ. இந்நூல் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கேற்ற