14034 தினசரி உபதேச மொழிகள்.

மா.வ.செல்லையாபிள்ளை (தொகுப்பாசிரியர்). சண்டிலிப்பாய்: ப.மு.செகராசசிங்கம், நடுக்குறிச்சி, 1வது பதிப்பு, 1929. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 135 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 20×13 சமீ. ‘இவர் (ப.மு.செகராசசிங்கம்) கீரிமலையிலே 1735-ம் ஆண்டுவரையிற் கட்டப்பட்டு நவாலியார் மடமென இப்போது வழங்கும் தண்டிகைக் கனகநாயக முதலியார் மடமும் அதைச் சேர்ந்த சில கட்டடங்களும் மிகவும் சிதிலமாயிருப்பதைக் கண்டு அவைகளைத் திருத்த விரும்புகின்றார். இம்மடம் இப்போது இவர் பராமரிப்பில் இருக்கின்றது. எல்லாரும் தருமத்துக்கு என்றுதானும் இரக்க உடன்படார்கள். இவர் இந்த மடத்தைத் திருத்துவதற்கு எவரையாவது வருத்திப் பொருள் வாங்க விரும்பாமல் அதுவுமொரு புண்ணிய வழியாற் பெறவிரும்பி இந்தத் தினசரி உபதேச மொழிகள் என்னும் நூலை இவர் மைத்துனரும் மலாய் நாட்டைச் சேர்ந்த வத்துக்காஜா நீதிமன்றத்துத் துவிபாஷகருமாகிய மானாமுதலியார் வைத்தியலிங்கம் செல்லையாவைக் கொண்டு இயற்றுவித்து அச்சிட்டிருக்கிறார். இந்த நூலை விற்று அதனால் வரும் பொருளைக் கொண்டு இப்பணியை நிறைவேற்ற நினைக்கின்றார். இந்த நூல் வருஷத்திலுள்ள 365 நாளைக்கும் நாளொன்றுக்கு ஒரு பாடமாக 365 பாடங்களை யுடையதாயிருக்கின்றது. இதற்காகத் தெரியப்பட்ட 365 செய்யுள்களும் அருமையான நூல்களினின்றும் எடுக்கப்பட்டன.” பாயிரம்- த.கைலாசபிள்ளை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02407).

ஏனைய பதிவுகள்