குமாரசுவாமி சோமசுந்தரம். கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xii, 286 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1133-05-4. மனித விழுமியங்கள், ஆன்மீகம் மற்றும் ஒழுக்கநெறிப் பண்புகள் தொடர்பான சிந்தனைக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியிருக்கின்றது. மனிதனுக்குத் தேவையான நலன்களை ஆசிரியர் அறுபது தலைப்புகளில் தொகுத்தளித்துள்ளார். கடவுள் நம்பிக்கை நலம், அன்பு நலம், உடல் நலம், மன நலம், உயிர் நலம், அறநெறி வாழ்வு நலம், மனிதப் பண்பு நலம், மனிதப்பிறவி நலம், வாழ்வியல் நலம், வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் நலம், பண்பாடு நலம், தூய்மை நலம், நலமே நாடும் நலம், கல்வி நலம், மனித விழுமியக் கல்வி நலம், இளமை நலம், இளையோர் பண்பு நலம், மரியாதைப் பண்பு நலம், நூலறிவு நலம், நற்பழக்க வழக்க நலம், சுய கட்டுப்பாடு நலம், சமூகச் சூழல் நலம், சமூகமயமாதல் நலம், முதுசொத்துக்கள் நலம், குடும்ப அமைதி நலம், முதுமையின் இனிமை நலம், துன்பமில்லாத வாழ்வு நலம், திட்டமிடுதல் நலம், சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் உணர்த்தும் காலநேர முகாமைத்துவ நலம், பெற்றோர் பிள்ளைகள்உறவு நலம், எண்ணமே வாழ்வு நலம், சாந்தி நலம், உணர்ச்சிக் கட்டுப்பாட்டு நலம், சினம் தவிர்த்தல் நலம், அகந்தை மமதை சீரமைத்தல் நலம், மனச்சுமை தவிர்த்தல் நலம், அச்சந் தவிர் நலம், மனக்கவலை ஒழித்தல் நலம், மது, போதைப்பொருள் பாவனை, புகைத்தல் தவிர்த்தல் நலம், மனம் இயற்கைச்சூழல் மாசடைதல் தவிர்த்தல் நலம், நிம்மதி நலம், மகிழ்ச்சி நலம், நேர்மை நலம், தன்னம்பிக்கை நலம், நல்லெண்ணம் சம்பாதித்தல் நலம், சமத்துவம் சகோதரத்துவம் நலம், சுதந்திரப் பண்பு நலம், சொல் செயல் நலம், முயற்சி வலிமை நலம், சக்தி நலம், தொண்டு நலம், பொது நலம், நட்பு நலம், நம்பிக்கை நாணயம் நலம், நடுவுநிலைமை நலம், பொய்யாமை நலம், நாநலம், உழைப்பு நலம், நகைச்சுவை நலம், உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று நலம் ஆகிய அறுபது தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. தினக்குரல் பத்திரிகையில் அறநெறிச் சாரமாக வெளிவந்த எழுத்துக்கள் இவை.