14036 நீதி நூல் தொகுப்பு.

சி.கந்தசாமி (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: விவேகானந்தசபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஜுன் 1976. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (6), 138 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12 சமீ. மனித வாழ்க்கையில் வெற்றியும், உலக முன்னேற்றமும் பெரும் பொருள் தேடித் திரட்டி ஆடம்பரமாக வாழ்வதனால் வருவனவன்று. இவை கடவுட் பற்றுடன் கூடிய பணிவு, நல்லறிவு, நல்லொழுக்கம், பிறர்க்குப் பயன்பட வாழ்தல் ஆகிய தன்மைகளால் அமைந்தனவாகும். இப்பக்குவ மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருக்கும் நீதிநூல்களிலுள்ள பகுதிகளைச் சிறுவர்கள் ஓதியுணர்ந்தும், பிறர்க்குரைத்தும், அதற்குத் தக நின்றும் சீரியராக வாழ்ந்து ஈடேற்றம் பெற வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட தொகுப்பு இதுவாகும். இத்தொகுப்பில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நன்நெறி, உலகநீதி ஆகிய நீதிநூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22342).

ஏனைய பதிவுகள்

14608 சியக்காய் வாசக்காரியும் சில்வண்டுக் காதலனும்.

அனாதியன் (இயற்பெயர்: மார்க் ஜனாத்தகன்). கனடா: ஐங்கரன் கதிர்காமநாதன், நிறுவுநர், படைப்பாளிகள் உலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvii, 80 பக்கம்,விலை: ரூபா

14740 ஆனந்தியின் இரு குறுநாவல்கள் (புது வீடு, குருஷேத்திரம்).

ஆனந்தி (இயற்பெயர்: மாதினியார் ஆனந்தநடராஜா). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 80 பக்கம், விலை: ரூபா 250.,

12150 – திருவாசக ஆராய்ச்சியுரை: முதலாம் பாகம்.

சு.அருளம்பலவனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: அ.சிவானந்தநாதன், காரைநகர், 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). (16), 480, ix பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ. மணிவாசகர் அருளிச் செய்த

14370 கலசம் 2009. இதழாசிரியர் குழு.

கொழும்பு: சாந்த கிளேயார் கல்லூரி, இந்து மாணவர் மன்றம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை). 155 பக்கம், புகைப்படங்கள், விலை:குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.

12070 – சைவ போதினி: நான்காம் ஐந்தாம் வகுப்புகள்.

விவேகானந்த சபை. கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது மீள்பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 8: அரசாங்க அச்சகத்திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). viii, 134