சி.கந்தசாமி (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: விவேகானந்தசபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஜுன் 1976. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (6), 138 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12 சமீ. மனித வாழ்க்கையில் வெற்றியும், உலக முன்னேற்றமும் பெரும் பொருள் தேடித் திரட்டி ஆடம்பரமாக வாழ்வதனால் வருவனவன்று. இவை கடவுட் பற்றுடன் கூடிய பணிவு, நல்லறிவு, நல்லொழுக்கம், பிறர்க்குப் பயன்பட வாழ்தல் ஆகிய தன்மைகளால் அமைந்தனவாகும். இப்பக்குவ மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருக்கும் நீதிநூல்களிலுள்ள பகுதிகளைச் சிறுவர்கள் ஓதியுணர்ந்தும், பிறர்க்குரைத்தும், அதற்குத் தக நின்றும் சீரியராக வாழ்ந்து ஈடேற்றம் பெற வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட தொகுப்பு இதுவாகும். இத்தொகுப்பில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நன்நெறி, உலகநீதி ஆகிய நீதிநூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22342).