14037 பகவத் கீதை வெண்பா: மூன்றாம் பாகம்: ஞான யோகம் (அத்தியாயம் 13-18) விளக்கக் குறிப்புடன்.

ஏ.பெரியதம்பிப்பிள்ளை. சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1976. (சுன்னாகம்: முத்தையா சபாரத்தினம், திருமகள் அழுத்தகம்). xxxii, 132 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்பு புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை எழுதியுள்ள இந்நூலில் புலவர்மணியவர்கள், கீதையைத் தமிழிலே வெண்பாவாகப் பாடி உரையும் எழுதி வழங்கியுள்ளார். ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் முன்னுரையுடனும், க.இராமச்சந்திரா அவர்களின் ஆராய்ச்சி முன்னுரையுடனும், சு.வித்தியானந்தன் அவர்களின் மதிப்புரையுடனும் வி.சீ.கந்தையா அவர்களின் அணிந்துரையுடனும் கூடியது. சேத்திர சேத்திரஞ்ஞ விபாக யோகம்: பொருட் சுருக்கம், சேத்திர சேத்திரஞ்ஞ விபாக யோகம், குணத்திரய விபாக யோகம்: பொருட் சுருக்கம், குணத்திரய விபாக யோகம், புருஷோத்தம யோகம்: பொருட் சுருக்கம், புருஷோத்தம யோகம், தைவாசுர சம்பத் விபாக யோகம்: பொருட் சுருக்கம், தைவாசுர சம்பத் விபாக யோகம், சிராத்தாத் திரய விபாக யோகம்: பொருட் சுருக்கம், சிராத்தாத் திரய விபாக யோகம், மோட்ச சன்னியாச யோகம்: பொருட் சுருக்கம், மோட்ச சன்னியாச யோகம் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்