14038 மகா வாக்கியங்கள்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). vi, 104 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-44445-5-3. பழந்தமிழ் புலவர்களும், ஆற்றல் மிக்க அறிஞர்களும், மனிதன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்ற நோக்கில் தமது வாழ்க்கை அனுபவங்களையும் அறிவுப் பொக்கிஷங்களையும் அரிச்சுவடிகளாக விட்டுச் சென்றுள்ளனர். அவை மனிதனை ஆற்றல் உள்ளவனாகவும், ஆளுமை மிக்கவனாகவும் உருவாக்க பெரும்பங்காற்றின. ஆனாலும் ஒவ்வொரு கல்விமான்களும் தமது கருத்துக்களைத் தனித்தனியான பாணிகளில் சமூகத்திடம் எடுத்துச்சென்றனர். இந்நூல்வழியாக ஆசிரியர் தவரத்தினம் அவர்கள் மகா வாக்கிய வரிகளுக்கு இணங்க சத்தியம், தர்மம் என்பவற்றைக் கடைப்பிடித்து மக்கள் ஒழுகுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அத்தகைய பல மகாவாக்கியங்களைத் திரட்டித் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

12119 – அப்பரும் சுந்தரரும் அருளிய அற்புதத் திருப்பதிகங்கள்: பதிக விளக்கத்துடன்.

சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: திருவருள் குலசிங்கம் அந்தியேட்டித்தின வெளியீடு, 27/12, பரக்கும்பா பிளேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). x, 174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: