14043 கற்பு நிலை.

யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் (மூலம்). புதுவை: கலாநிதி பிரஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (புதுவை: கலாநிதி பிரஸ்). 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஞானகுருவாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் அவ்வப்போது செய்யுள்களாகவும், உரைநடைகளாகவும் வழங்கிய உரைகளைத் தொகுத்துத் தந்துள்ளனர். செய்யுட் பிரிவில் கற்பு நிலை (பதி விளக்கம்), சித்தி விளக்கம், அகண்ட பரிபூரண விளக்கம், எழுத்துற்பத்தி விளக்கம் ஆகியவையும், உரைநடைப் பிரிவில் சத்திய விளக்கம், ஆட்டச் செயலின் விளக்கம், அநாதி நின்ற நிலை, லீலை விளக்கம், மவுன விளக்கம், கற்கை விளக்கம், மங்கள விளக்கம், சீவ விளக்கம், கூலி விளக்கம், கலைச்சூழலின் விளக்கம், தந்திர விளக்கம், திருமணக் காட்சி விளக்கம், துறவு விளக்கம், ஞானவிளக்கம், வினையெச்ச விளக்கம் ஆகிய தலைப்புக்களில் உரைநடை விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. போதிய நூல்விபரத் தகவலின்றி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3075).

ஏனைய பதிவுகள்

14781 பணிக்கர் பேத்தி.

ஸர்மிளா ஸெய்யித். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600077: மணி ஓப்செட்). 104 பக்கம், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 21.5×14 சமீ.,

14414 தமிழ் எழுத்துக்கள்.

நூலாசிரியர் குழு. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 2015.

12065 சைவ சமயம்: க.பொ.த.(சாதாரணம்) புதிய பாடத்திட்டத் தொகுதி 1974-75.

விவேகானந்த சபை. கொழும்பு: விவேகானந்த சபை வெளியீடு, 1வது பதிப்பு, ஆவணி 1973. (கொழும்பு 11: அவ்ரா பிரின்டிங் வேர்க்ஸ், 19, செட்டியார் தெரு). 118+102+xxvii+23 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 20.5ஒ14

12060 – வழிபாடு.

ப.கணபதிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: அமரர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளை நினைவுமலர்க் குழு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் ஓப்செட் பிரின்டிங், நல்லூர்). vi, 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. தாம்

12965 – வீரசங்கிலியன்: பாகம் 1.

ம.க.அ.அந்தனிசில் (மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், இல.681, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம்). x, 47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,