14043 கற்பு நிலை.

யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் (மூலம்). புதுவை: கலாநிதி பிரஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (புதுவை: கலாநிதி பிரஸ்). 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஞானகுருவாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் அவ்வப்போது செய்யுள்களாகவும், உரைநடைகளாகவும் வழங்கிய உரைகளைத் தொகுத்துத் தந்துள்ளனர். செய்யுட் பிரிவில் கற்பு நிலை (பதி விளக்கம்), சித்தி விளக்கம், அகண்ட பரிபூரண விளக்கம், எழுத்துற்பத்தி விளக்கம் ஆகியவையும், உரைநடைப் பிரிவில் சத்திய விளக்கம், ஆட்டச் செயலின் விளக்கம், அநாதி நின்ற நிலை, லீலை விளக்கம், மவுன விளக்கம், கற்கை விளக்கம், மங்கள விளக்கம், சீவ விளக்கம், கூலி விளக்கம், கலைச்சூழலின் விளக்கம், தந்திர விளக்கம், திருமணக் காட்சி விளக்கம், துறவு விளக்கம், ஞானவிளக்கம், வினையெச்ச விளக்கம் ஆகிய தலைப்புக்களில் உரைநடை விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. போதிய நூல்விபரத் தகவலின்றி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3075).

ஏனைய பதிவுகள்

12644 – அபிவிருத்திக்கான முகாமைத்துவச் சிந்தனைகளும் செயற்பாடுகளும்.

மா.செல்வராஜா. மகரகம: மா.செல்வராஜா, கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1996. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1,B.T.P.DeSilva Mawatha). 163 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN:

13A10 – சைவ சமயம்: ஓர் அறிமுகம்.

ப.அருணாசலம். கொழும்பு: அமரர் திருமதி பொன்னுச்சாமி பரமேஸ்வரி அவர்களின் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founders Street). (12), 168 பக்கம், விலை: