14046 தத்துவ சிந்தனை மரபில் சைவசித்தாந்தம் கூறும் ஆன்மா.

பால. இந்திரக் குருக்கள். அவுஸ்திரேலியா: சைவப்புலவர் சிவஸ்ரீ பால. இந்திரக் குருக்கள், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்). 104 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ. பிறப்பின் முன் ஆன்மாவின் நிலை, சைவசித்தாந்தம் கூறும் ஆன்மா, வேதாகமங்களில் சித்தாந்த ஆன்மா, உபநிடதங்களில் சித்தாந்த ஆன்மா, இலக்கியங்களில் சித்தாந்த ஆன்மா, திருமுறைகளில் சித்தாந்த ஆன்மா, இறப்பின் பின் ஆன்மாவின் நிலை ஆகிய ஏழு இயல்களில் இவ்வாய்வு நூல் எழுதப்பட்டுள்ளது. உலகில் தோன்றும் உயிர்வகைகள் முட்டை, வியர்வை, விதை, கரு என்ற நான்கு வகைகளிலேயே தோன்றுகின்றன. அவை தேவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம், என எழுவகைப் பிறவிகளிலே பிறக்கின்றன என்கின்றது சைவசித்தாந்தம் என இந்நூல் குறிக்கின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63629).

ஏனைய பதிவுகள்