ரஞ்சித் சமரநாயக்க (பிரதம ஆசிரியர்). பத்தரமுல்ல: ஐக்கிய பௌத்த மத்திய சபை, செத்சிரிபாய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே, 1வது பதிப்பு, வைகாசி 1991. (கொழும்பு 7: முனிசிப்பல் அச்சகம்). (26), 140 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ. சமாதானம், ஒற்றுமை, அபிவிருத்தி, சுபீட்சம் தொடர்பான விசேட தொகுப்பு. மும்மொழிகளிலுமான கட்டுரைகளைக் கொண்டது. 24 சிங்கள ஆக்கங்களையும், 15 ஆங்கில ஆக்கங்களையும், இரண்டு தமிழ் ஆக்கங்களையும் இம்மலர் கொண்டுள்ளது. தமிழ் ஆக்கங்களை சி.தில்லைநாதன் (புத்தர் வழி அமைதியும் ஒற்றுமையும்), த.கனகரத்தினம் (இலங்கையின் தேசிய ஒற்றுமை, சமாதானம், அபிவிருத்தி பற்றிய பௌத்த நெறிச் சிந்தனைகள்) ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10989).