ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு: ANCL, Commercial Printing Department). vi, 106, iv, 12, x, 124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 67ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக கன்மம் தற்றுணிபு பற்றிய பௌத்த சைவ சித்தாந்தக் கொள்கைகள் (த.கனகரத்தினம்), சூழ்ச்சியை வென்றிட்ட சீலம்- கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), உறவினர் இடையில் ஒரு கலகம் (ருவன் பண்டார அதிகாரி) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23727).
16667 சிறகு விரிக்காத பறவைகள்.
நாவற்குழி சு.சிவராஜா. யாழ்ப்பாணம்: இலங்கை தேசிய பார்வையற்றோர் சம்மளனம், வட மாகாணக் கிளை, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (யாழ்ப்பாணம்: தெல்லி அச்சகம், கொக்குவில்). x, 78 பக்கம், விலை: