சுவாமி கோகுலானந்தா (ஆங்கில மூலம்), பெ.சு.மணி (தமிழாக்கம்). கொழும்பு 6: ராமகிருஷ்ணா மிஷன், 40, ராமகிருஷ்ணா சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (சென்னை 600 005: நடராஜ் ஆப்செட் பிரஸ், 28, முத்துகாளத்தி தெரு, திருவல்லிக்கேணி). 204 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 18×12.5 சமீ. சுவாமி கோகுலானந்தாவின் பதினொரு சொற்பொழிவுகளைக் கொண்டுள்ள இந்நூல் ஆன்மீக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் தேவைகளை நிறைவு செய்கிறது. இந்தப் பேருரைகள் பெரும்பாலும் விவேக சூடாமணி மற்றும் பகவத்கீதையில் இருந்து எடுத்துக்காட்டப்படும் மேற்கோள்களை ஆதாரமாகக் கொண்டுள்ளன. விவேக சூடாமணி, ஞான மார்க்கத்தின் மூலமாகவும், பகவத்கீதை பக்தி மார்க்கத்தின் மூலமாகவும் உடல் உணர்வைக் கடந்து மேலே செல்வதற்கு சாதகனைத் தூண்டுகிறது. இந்த ஆன்மீக போதனைகளை விளக்குமிடங்களில் மேலைநாட்டுப் பல ஞானிகள் போதனைகளையும் இணைத்திருப்பது இந் நூலில் தனிச்சிறப்பாகும். இப்பேருரைகள் உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு, ஆன்மீக வாழ்க்கையில் தடங்கல்கள், ஆன்மீக வாழ்க்கைக்குரிய சாதனங்கள், விவேகம் வைராக்கியம் ஷட்சம்பத்தி, முமு~;த்வம், ஜபசாதனை முறை, வாசனைகளை கட்டுப்படுத்துவது எப்படி? அஹங்காரத்தை ஒழிப்பது எப்படி? தேகம்-மனத்தின் தூய்மைப்பாடு, சுயக்கட்டுப்பாடே ஆத்மஞானத்திற்கு திறவுகோல், மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை, கடவுளுடன் இயைந்த வாழ்க்கை ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27446).