பிரம்மஸ்ரீ சோ.குஹானந்த சர்மா. கொழும்பு 13: பிரம்மஸ்ரீ சோ.குஹானந்த சர்மா, 136/28, ஜோர்ஜ் ஆர்.த.சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு: ஓட்டோ பிரின்டர்ஸ்). viii, 44 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 22×14.5 சமீ., ISBN: 955-96822-2-9. சைவ இல்லம், கோவில் வழிபாடு, நவக்கிரக வழிபாடு, விபூதி-திருநீறு, ருத்திராக்ஷம், பஞ்சாக்ஷரம் – ‘ஓம் சிவாயநம”, பயனூறு திருப்பாடல்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் இலங்கையில் சைவ மக்கள் கடைப்பிடிக்கும் சைவ அனுஷ்டானங்கள் பற்றியும், பாரம்பரிய சைவ வாழ்வுமுறை பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது. சைவ இல்லமொன்று எவ்வாறு காட்சிதரும் என்பதிலிருந்து சைவக் கடவுளரின் வழிபாடுகள் சிலவும் விபரிக்கப்பட்டுள்ளன. திருநீறு, உருத்திராட்ச மாலை, பஞ்சாட்சர மந்திரம் போன்ற சைவர்களின் சமயம்சார்ந்த விடயங்களை தனித்தனி அத்தியாயங்களில் விபரித்திருப்பது இந்நூலின் முக்கியத்துவமாகின்றது. நூலின் இறுதி அத்தியாயத்தில் சைவர்கள் அதிகமாகப் பாடும் திருப்பாடல்கள் சிலவும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29144).