ஆ.விஸ்வலிங்கம். கொழும்பு: டாக்டர் ஆ.விஸ்வலிங்கம், 26, உவார்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 1975. (சென்னை-01: Hoe and Co.,The Premier Press).. 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. அறமே மூலாதாரமாகக் கொண்டு வருவித்த மனித வாழ்வை விளக்கும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை. கடவுளைப் பற்றிய தௌ;ளிய அறிவையும் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தையும், பாசத்தின் திறமையையும், ஜீவகாருண்யத்தின் மகிமையையும் தெய்வத்தின் கருணை கலந்த நீதிமயமான பூமிகளையும் குறித்து, சைவசமயத்தையும் சைவ சித்தாந்தத்தையும் மீறி வேறு எந்த மதத்திலும் இத்துணை அழகாயும் தெளிவாயும் எடுத்துக்காட்டப்படவில்லை என்று உறுதிபடக்கூறும் இக்கட்டுரை பாளையங்கோட்டை சைவ சபை மகாசங்கச் சொற்பொழிவாளர்களான திருவாளர்கள் தில்லைநாயக முதலியார், ரி.பக்தவத்சலம், ரி.செல்வகேசவ முதலியார், பண்டிதை அகலாம்பிகை அம்மாள் ஆகியோரின் உரைகளினின்றும் எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24541).