14066 சாயிபாபா அவதாரங்கள்.

வானதி ரவீந்திரன் (ஆங்கில மூலம்), சீமாட்டிதேவிகுமாரசாமி, வானதி ரவீந்திரன் (தமிழாக்கம்). கொழும்பு: Ranco Printers and Publishers Ltd,.இ 1வது பதிப்பு, 1992. (சென்னை 600005: கிராபிக் சிஸ்டம்ஸ், 67, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை). xxviii, 183 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. திருமதி வானதி ரவீந்திரன் 1990இல் எழுதிப் பிரசுரித்திருந்த Saibaba Avatars என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது. முதல் தரிசனம், இறைவனிடமே புகலிடம், இறைவன் அவதரிக்கிறார், அவதாரத்தின் அரும்பணி, அவதாரத்தின் வருகை, சத்தியசாயி பாபா தோற்றம், தெய்வீகப் பிறவி, சீரடியில் சாயி, தன்னலமில்லாச் சேவை, சேவை மூலம் இறைவனை அடைதல், சாயி அவதாரத்தின் நோக்கம், அப்யாச யோகம், கலியுகத்தில் சாதனை, பிரகடனம், யார் இந்த சாயிபாபா? தெய்வீகத் தன்மை புலப்படுத்தப்படுகின்றது, சாயியின் அற்புதங்கள், தெய்வீக சக்தி, சாயியின் நாமம் பரவுகிறது, சாயி மந்திர், சாயியினுடைய சர்வதர்மம், கடவுளின் பிரசன்னம், முடிவுரை, கருத்துரை ஆகிய 24 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. சீமாட்டிதேவி குமாரசாமி, யாழ். இராமநாதன் கல்லூரி ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி 1988-91 காலகட்டத்தில் அதிபராகி, உதவி ஆணையாளர் பதவியேற்று, கல்விநூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் உயர்பதவியிலிருந்து 1992இல் ஓய்வுபெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24108).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்