கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). x, 125 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-5222-08-7. கந்தையா பத்மானந்தன் காரைநகர் மண்ணின் கல்வித்துறை ஆளுமைகளில் ஒருவர். விஞ்ஞானப் பட்டதாரியான இவர், முதுநிலைக் கற்கையினையும், தொழில்வாண்மைக் கல்வியினையும் பல்வேறு நாடுகளிலும் பெற்றிருந்தவர். இலக்கியத்துறையில் ஈடுபாட்டுடன் எழுதி வருபவர். இந்நூலில் சைவ சமயிகளின் முக்கிய விடயமான திருநீறணிதல் தொடர்பிலான பல்வேறு தகவல்களையும் கட்டுரை வடிவில் திரட்டித் தந்துள்ளார். சைவசமயம், சிவசின்னம்-திருநீறு, திருநீறு என்பது, சிவன் திருநீற்றுப் பிரியன், திருநீற்றின் வரலாறு, திருநீற்றின் பெருமை, திருநீறு அணிவதன் பயன், நோய் தீர்க்கும் நீறு, வைத்தீசுவரன் கோவில் சாத்துருண்டைப் பிரசாதம், திருச்செந்தூர் பன்னீர் இலைத் திருநீறு, நோய் தீர்த்த குட்டையன் செட்டியார், தீராத நோய்களைத் தீர்க்கும் திருநீலகண்டப் பிள்ளையார், சங்கரன் கோவில் புற்று மண்ணும் திருநீறும், திருநீற்றின் வகைகள், கற்பநீறு, அநுகற்பநீறு, உபகற்பநீறு, வீடுகளில் திருநீறு செய்யும் முறை, திருநீறு பசுஞ் சாணத்தினால் செய்யப்படுவதற்கான காரணங்கள், திருநீற்றை வைத்திருக்கும் பாத்திரம், திருநீறு அணியும் முறை, உடலில் திருநீறு அணியும் இடங்கள், தரிக்கக்கூடாத திருநீறு, திருநீறு அவசியந் தரிக்க வேண்டிய நேரங்கள், திருநீறு தரிக்கக்கூடாத இடங்கள், திருநீறினை திரிபுண்டரமாக அணிவதற்கான காரணங்கள், அனுட்டானம் செய்வோர் திருநீறு தரிக்கவேண்டிய முறை, திருநீற்றை எவ்வாறு தரிக்கக்கூடாது, திருநீற்றின் விஞ்ஞான தத்துவம், அருணகிரிநாதரும் திருநீறும், திருஞானசம்பந்தரும் திருநீறும், சேக்கிழாரும் திருநீறும், திருநீறு போற்றி வாழ்ந்த நாயன்மார்கள், முழுநீறு பூசிய முனிவர், பாம்பாட்டிச் சித்தர் பாம்பன் சுவாமிகளும் திருநீறும், வாரியார் சுவாமிகளும் திருநீறும், நெசவாளியும் திருநீறும், திருநீற்றால் பயனடைந்த மேலும் சிலர், திருநீற்றோடு சம்பந்தமுள்ள சில திருத்தலங்கள், சரவணபவ என்னும் ஆறு எழுத்தும் திருநீறும் ஆகிய 40 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது.