வி.சங்கரப்பிள்ளை. கொழும்பு 6: மா.வாமதேவன், சிவத்திருமன்ற வெளியீடு, 13A, 40ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு 2003. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், 581, 2/1, காலி வீதி, வெள்ளவத்தை). xxiv, 32 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 22×14.5 சமீ. பிரணவம் என்ற ஓங்காரம் ஒளிர்ந்தது. ஓம் என்பதைப் பிரித்தால் அூஉூஅம் என்று வெளிப்படும். அது படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரையும் தன்னகத்தே கொண்டது. ஐந்து எழுத்து அகார உகார வகார மகார யகாரம்மே பிரணவம்.’ஓம்” என்பதை ‘பிரணவ மந்திரம்” என்று சொல்கிறார்கள். பிரணவம் என்பதற்கு பொருள் ‘என்றும் புதியது” என்பதாகும். ‘ஓம் ஓம் ஓம்” என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ‘ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி” என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். சைவர் வாழ்வில் அத்தகு பிரசித்தி பெற்ற பிரணவ மந்திரம் பற்றி இந்நூல் விளக்குகின்றது. இந்நூலாசிரியர், கீரிமலை சிவநெறிக் கழகத்தின் சைவ சித்தாந்த ஆசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33211).