என்.கே.எஸ். திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). ஒஒஎi, 321 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 850., அளவு: 21.5×14.5 சமீ. அனுராதபுர மாவட்டத்தில் காணப்பட்ட புராதன இந்துக் கோவில்களை இந் நூல் சமூகவியல், தொல்லியல் சான்றுகளுடன் விரிவாக அடையாளப்படுத்தியுள்ளது. அறிமுகக் கட்டுரையாக அனுராதபுரம் மாவட்டத்தின் பண்டைய இந்துக் கோயில்கள்-ஓர் அறிமுகம் என்ற கட்டுரையுடன், 108 இந்து ஆலயங்கள் பற்றிய தனித்தனிக் கட்டுரைகளின் முடிவில், அனுராதபுர மாவட்டத்தில் இந்து தெய்வங்கள் தொடர்பான பிராமிக் கல்வெட்டுக்கள், அனுராதபுர மாவட்டத்தின் தமிழ்க் கிராமங்கள், அனுராதபுர மாவட்டத்தில் சுடுமண் லிங்க வடிவங்களும், தெய்வ உருவங்களும், அனுராதபுரத்தில் இந்து சமய சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63623).