நா.கதிரைவேற்பிள்ளை (மூலம்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: பருத்தித்துறை நண்பர்கள், கல்வி, சமூக நலன்சார் அமைப்பு, 3வது பதிப்பு, ஓகஸ்ட் 2017, 2வது பதிப்பு, 1902. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xliv, 192 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-7347-02-8. ஆரணி நகர சமஸ்தான வித்துவானும், அத்துவித சித்தாந்த மதோத்தாரணரும் மாயாவாத தும்சகோளரியும் ஆகிய யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை அவர்களால் இரண்டாவது பதிப்பாக சுபகிருது ஆண்டு (1902) கார்த்திகை மாதத்தில் சென்னை சி.நா.அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப் பெற்றது. பருத்தித்துறை நண்பர்கள், கல்வி, சமூக நலன்சார் அமைப்பினர், தமது இரண்டாவது பிரசுரமாக இந்நூலை மீள்பதிப்புச் செய்து 2017இல் வெளியிட்டுள்ளனர். பிள்ளை அவர்கள் பன்முக ஆளுமை கொண்டவர். நூலாசிரியராக, உரையாசிரியராக, போதனாசிரியராக, சொற்பொழிவாளராக, சைவசித்தாந்த அறிஞராக அகராதிக் கலைஞராக விளங்கியவர். நாவலரின் நேரடி மாணவரான தியாகராச பிள்ளையிடம் வரன்முறையாக பாடம் கேட்டவர். நாவலரில் அதிக பக்தியும் பாசமும் உடையவர். நாவலருக்காக நீதிமன்றமும் சென்று வெற்றிவாகை சூடியவர்.