14085 சைவ போதினி மத்திய பிரிவு (எட்டாம் வகுப்புக்குரியது).

நூலாக்கக்குழு. கொழும்பு13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 3வது பதிப்பு, மார்ச் 1964. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). (4), 186 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 2.00, அளவு: 18ஒ12.5 சமீ. கொழும்பு விவேகானந்த சபை நடத்தும் அகில இலங்கைச் சைவசமய பாடப் பரீட்சைக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட தொகுப்பு நூல். நான்கு பகுதிகளில் எழுதப்பட்டுள்ள இப்பாடநூலின் முதற்பகுதியான ’அருட்பாடல்களும் நீதிப் பகுதியும்” திருஞான சம்பந்தர் தேவாரம், திருநாவுக்கரசர் தேவாரம், சுந்தரர் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. திருப்புராணம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், நீதிப் பகுதிதிருக்குறள்ஆகிய பாடங்களைக் கொண்டுள்ளது. இரண்டாம் பகுதியான ‘சமய நூல்களில் பேசப்படும் பொருள்கள்” சைவசமயம், வேதம், ஆகமம், புராணஇதிகாசம், பரமசிவம், சிவலிங்கம், உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, சரசுவதி, ஆன்மா, ஆணவம், மாயை, தனுகரண புவன போகம், கன்மம், சிவபுண்ணியம், சரியை-கிரியை-யோகம்-ஞானம் ஆகிய பாடங்களைக் கொண்டுள்ளது. மூன்றாவது பகுதியான ‘வரலாறுகளும் கதைகளும்;” திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள், மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார், மன்று தொழுத பதஞ்சலி, மங்கையர்க்கரசியார் ஆகிய பாடங்களைக் கொண்டுள்ளது. நான்காவது பகுதியான ‘திருக்கோயில்கள்” இராமேச்சுரம், பழநி, காசி ஆகிய பாடங்களைக் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 16645).

ஏனைய பதிவுகள்