14086 சைவப் பிரகாசிகை: முதலாம், இரண்டாம்,மூன்றாம், நான்காம், ஐந்தாம் புத்தகங்கள்.


ச.குமாரசுவாமிக் குருக்கள். கொழும்பு 4: அறநெறிப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19, கே.சிறில் சி.பெரேரா மாவத்தை). 250 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5/14.5 சமீ. அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை முகாமையாளர் சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பெற்று 1950களில் வெளிவந்துள்ள சைவப் பிரகாசிகையின் முதல் ஐந்து பாடநூல்களினதும் தொகுப்பாக இந்நூல் மீள்பிரசுரம் கண்டுள்ளது. இது ஆசிரியரின் சமயக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50489).

ஏனைய பதிவுகள்