14088 ஈழத்து இந்துக் கோயில்கள்: ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2019.

ஏ.அனுசாந்தன், தேவகுமாரி ஹரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ. இலங்கையில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2019இல் நடத்திய ஆய்வரங்கின் போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். திருக்கோணேஸ்வரம் (நித்தியவதி நித்தியானந்தன்), திருக்கேதீஸ்வரம் (நித்தியவதி நித்தியானந்தன்), கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில் (நித்தியவதி நித்தியானந்தன்), ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோயில் (நித்தியவதி நித்தியானந்தன்), வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் -யாழ்ப்பாணம் (வசந்தா வைத்தியநாதன்), வல்வெட்டித்துறை சிவன்கோயில் (இந்திராதேவி சதானந்தன்), தேசத்துக் கோயில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் (த.ஜீவராஜ்), கீரிமலைச் சிவன்கோயில் நகுலேஸ்வரம் (சிவ.மகாலிங்கம்), வானவன் மாதேவீஸ்வரம் (சி.பத்மநாதன்), முன்னேஸ்வரம் (வி.சிவசாமி), முகத்துவாரம் ஸ்ரீசுவர்ணாம்பிகா சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வர சுவாமி ஆலயம் (இந்திரா சதானந்தன்), திருக்கரைசையம்பதி திருமங்கலாய் சிவன்கோவில் (இ.வடிவேல்), அனலைதீவு-புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில் (நயினை ஆ.தியாகராசா), மட்டுவில் கல்வம் சிவசந்திர மௌலீசர் ஆலயம் (ஆர்.வி.கந்தசுவாமி), அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில் கோவில்குளம் வவுனியா(ஆறுமுகம் நவரத்தினராசா), நல்லூர் கைலாசநாதர் கோயில் (வி.சிவசாமி), திருநந்தீஸ்வரம்- இரத்மலானை (த.மனோகரன்), ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம், நல்லூர் சட்டநாத ஈஸ்வரர் கோவிலின் தோற்றம்: ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (செ.கிருஷ்ணராஜா), நாகர் கோயில் (க.கணபதிப்பிள்ளை), மண்டூர் முருகன் கோயில் (சி.சந்திரசேகரம்), திருக்கோயில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம் (தங்கேஸ்வரி கதிர்காமர்), நல்லூர்க் கந்தசுவாமி கோயில் (சி.பத்மநாதன்), தொண்டைமானாறு செல்வச்சந்நிதி (வல்வை. ந.அனந்தராஜ்), மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் (எஸ்.சுதாகரன்), உகந்தை ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோவில், கதிர்காமம் (சி.பத்மநாதன்), சித்தாண்டி சித்திர வேலாயுதர் கோயில் (வ. குணபாலசிங்கம்), திருகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி கோயில் (அ.ஆ.ஜெயரட்ணம்), வெருகலம்பதி சித்திரவேலாயுதர் கோயில் (ந.சுபராஜ்), இணுவில் கந்தசுவாமி கோயில், திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் (இ.வடிவேல்), பாண்டிருப்பு திரௌபதையம்மன் கோயில் (சு.துஷ்யந்), நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் (ஆ.சசிநாத்), மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலயம் (இந்திரா சதானந்தன்), வாழைச்சேனை மருங்கையடிப் பூவல் கைலாய பிள்ளையார் கோயில் (வி.சி.கந்தையா), கண்டி கட்டுக்கலை செல்வவிநாயகர் ஆலயம் (இராசையா மகேஸ்வரன்), இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில், மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் (நா.வாமன்), வந்தாறுமூலை மகா விஷ்ணு கோவில் (வி.சி.கந்தையா), வல்லிபுர ஆழ்வார் கோவில் (இந்திராதேவி சதானந்தன்), பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயில் (ந.சுபராஜ்), மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் தேவஸ்தானம் (மாத்தளை வடிவேலன்) ஆகிய 43 கட்டுரைகள் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Twin Spin On line Slot

Blogs Choices If you have Some Issues with A-game Rotiri Gratuite Fără Depunere Winbet They give people the new excitement of the spin and also

12700 – நாட்டிய நாடகத் தொகுப்பு (பரிசு பெற்ற நாடகங்கள்).

வைகுந்தம் கணேசபிள்ளை. யாழ்ப்பாணம்: இணுவில் திருநெறிய தமிழ்மறைக்கழகம், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில், 1வது பதிப்பு, 2012. xix, 124 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5 x 14.5 சமீ. யாழ்.