தம்பிப்பிள்ளை காசிநாதன். யாழ்ப்பாணம்: தம்பிப்பிள்ளை காசிநாதன், சுதுமலை தெற்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, வைகாசி 1986. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). xvi, 40 பக்கம், புகைப்படங்கள், தகடு, விலை: ரூபா 10.00, அளவு: 18×12.5 சமீ. சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவில் இலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இக்கோயிலில் அம்பாள் எழுந்தருளப்பெற்று 200 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இந்நூலில் மேற்படி கோயில் வரலாறானது பத்து அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. சுதுமலை ஓர் அறிமுகம், கண்ணகி அம்மனும் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாளும், கோயில் சிறப்பும் கோயில் அமைப்பும், திருவிழாச் சிறப்பும் வழிபாட்டு மரபுகளும், கர்ணபரம்பரைக் கதைகளும் அற்புதங்களும், கோயிற் திருப்பணி வரலாறு, கோயிற் பரிபாலனம், (நிர்வாகம், கோயில் குருக்கள்மார்), பாயிரம்- மானியம்பதி ஸ்ரீ தா.சுவாமிநாதன்), திருவூஞ்சல் (மானியம்பதி வித்துவான் மகாஸ்ரீ அ.சுவாமிநாத முதலியார்), சந்தக் கவிமாலை (பண்டிதர் செ.சிவப்பிரகாசம்) ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சுதுமலைக் கிராமவாசியான இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளராகவிருந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16344).