14092 சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோயில் வரலாறு.

தம்பிப்பிள்ளை காசிநாதன். யாழ்ப்பாணம்: தம்பிப்பிள்ளை காசிநாதன், சுதுமலை தெற்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, வைகாசி 1986. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). xvi, 40 பக்கம், புகைப்படங்கள், தகடு, விலை: ரூபா 10.00, அளவு: 18×12.5 சமீ. சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவில் இலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இக்கோயிலில் அம்பாள் எழுந்தருளப்பெற்று 200 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இந்நூலில் மேற்படி கோயில் வரலாறானது பத்து அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. சுதுமலை ஓர் அறிமுகம், கண்ணகி அம்மனும் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாளும், கோயில் சிறப்பும் கோயில் அமைப்பும், திருவிழாச் சிறப்பும் வழிபாட்டு மரபுகளும், கர்ணபரம்பரைக் கதைகளும் அற்புதங்களும், கோயிற் திருப்பணி வரலாறு, கோயிற் பரிபாலனம், (நிர்வாகம், கோயில் குருக்கள்மார்), பாயிரம்- மானியம்பதி ஸ்ரீ தா.சுவாமிநாதன்), திருவூஞ்சல் (மானியம்பதி வித்துவான் மகாஸ்ரீ அ.சுவாமிநாத முதலியார்), சந்தக் கவிமாலை (பண்டிதர் செ.சிவப்பிரகாசம்) ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சுதுமலைக் கிராமவாசியான இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளராகவிருந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16344).

ஏனைய பதிவுகள்

Bingo Online Acostumado

Content Revisão Pressuroso Aparelho Infantilidade Slot Zeus Como Aprestar Slots Online Acimade Cassinos Escolhendo Briga Acabamento Caça Outros Slots Da Bf Games Símbolos Wild E

Huge Max Multi Reel Swintt

Blogs What is the Difference in Multi Why Play In the An excellent Bitcoin Gambling establishment? Vr Slot Video game Innovation Characteristics How to pick

12493 – மகாஜனன் பாரிஸ்-மலர் 1993.

சின்னத்துரை மனோகரன் (இதழாசிரியர்), ப. பாலசிங்கம் (இதழ் ஆலோசகர்). பிரான்ஸ்: எம்.சின்னத்துரை, பாரிஸ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 73, Rue Doudeauville, 75018,Paris1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (அச்சக விபரம்

14439 தமிழ் மொழி உயர்தரம்.

அரசகரும மொழிகள் திணைக்களம். ராஜகிரிய: அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). (10), 159+9 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN:

14576 இறுகியிருக்கும் வரிகளுக்குள் நீ திரவமென ஓடிக்கொண்டிருக்கிறாய்.

அசரீரி (இயற்பெயர்: பதீக் அபூபக்கர்). வாழைச்சேனை 05: காகம் வெளியீடு, (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்), மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).