வி.சீ.கந்தையா. கொழும்பு 07: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98 வோட் பிளேஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி வீதி, வெள்ளவத்தை). (22), 364 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14. சமீ. இந்நூலின் முதலாம் பாகம் 1983இலும் 2ஆம் பாகம் 1991இலும் வெளியிடப்பட்டிருந்தன. இந்நூல் அவ்விரண்டு பாகங்களையும் ஒருங்கிணைத்த தனிநூலாகும். முதற் பிரிவில் ஈச்சரங்கள், மலைக் கோவில்கள், திருப்படைக் கோயில்கள், பிள்ளையார் கோயில்கள், அம்மன் கோவில்கள் ஆகிய தலைப்புக்களில் கோவில்கள் வகைப்படுத்தப்பெற்று ஒவ்வொரு கோவிலுக்கும் உரிய விபரங்கள் தனித்தனிக் கட்டுரையுருவில் தரப்பட்டுள்ளன. 1ஆவது இயலில் நூற் பொது அறிமுகம், 2ஆவது இயலில் ஈச்சரம் இரண்டு (மாமாங்கேச்சரம், தான்தோன்றீச்சரம்), 3ஆவது இயலில் மலைக்கோவில் மூன்று (உகந்த மலை, தாந்தாமலை, சங்கு மண் கண்டி மலை), 4ஆவது இயலில் திருப்படைக் கோவில்கள் (திருக்கோவில், தில்லை மண்டூர்த் திருத்தலம், கோவில் போரதீவு சித்திரவேலாயுத சுவாமி, சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி, வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி), 5ஆவது இயலில் பிள்ளையார் கோயில்கள் (ஆனைப்பந்தி பிள்ளையார் கோயில், களுதாவளைப் பிள்ளையார் கோயில், அம்பாறை வில்லுப்பிள்ளையார் கோயில், காரைதீவு பாலையடிவால விக்னேஸ்வரர் கோயில், பழுகாமம் மாவேற்குடாப் பிள்ளையார் கோயில், ஆரையம்பதி திருநீலகண்டப் பிள்ளையார் கோயில், வாழைச்சேனை (முருங்கையடிப்பூவல்) ஸ்ரீகைலாயப் பிள்ளையார் கோயில்), 6ஆவது இயலில் அம்மன் கோயில் (கொத்துக் குளத்து முத்துமாரியம்மன் கோயில், புன்னையம்பதி (கோட்டமுனை) மகாமாரியம்மன் கோயில், காரைதீவு கண்ணகியம்மன் கோயில், களுவாஞ்சிக்குடி கண்ணகியம்மன் கோயில், பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில், வெல்லாவெளி முத்துமாரியம்மன் கோயில், கோராவெளி கோல வள்ளிநாயகி கோயில், ஏறாவூர் பத்திரகாளி கோயில், பெரிய போரதீவு பத்திரகாளி அம்மன் கோயில்), 7ஆவது இயலில் பொதுக் கோயில்கள் (ஏறாவூர் வீரபத்திரன் கோயில், வந்தாறுமூலை கிருஷ்ணன் கோயில், பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோயில், மட்டக்களப்பு நரசிங்க வைரவ சுவாமி கோயில்), எனக் கோவில்களின் வரலாறுகள் பகுத்துத் தரப்பட்டுள்ளன. 8ஆவது இயலில் மட்டக்களப்பிலுள்ள சைவக் கோவில்கள் பெயர் வரிசை இடம்பெற்றுள்ளது. இரண்டாம் பிரிவில், மட்டக்களப்பில் எழுந்தருளியிருக்கும் மூன்று பிள்ளையார் கோவில்கள், ஒரு சிவன் கோவில், ஆறு முருகன் கோவில்கள், ஐந்து அம்மன் கோவில்கள், ஒரு விஷ்ணு கோவில், ஒரு வீரபத்திரர் கோவில் என்பனவற்றை அறிமுகப்படுத்தும் தனித்தனிக் கட்டுரைகளாக இவை தொகுக்கப்பட்டுள்ளன. 1ஆவது இயல் (அறிமுகம் பொது), 2வது இயல் (பிள்ளையார் கோவில்கள் மூன்று: கோட்டைமுனை ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் கோவில், வீரமுனைச் சிந்து யாத்திரைப் பிள்ளையார் கோவில், மண்டூர் – நாகஞ்சோலை மாணிக்கப்பிள்ளையார் கோவில்), 3வது இயல் (சிவன் கோவில் ஒன்று: செட்டிபானையம் சோமநாத இலிங்கேஸ்வரர் சோமகலாநாயகி கோவில்), 4வது இயல் (முருகன் கோவில் ஆறு: ஈழத்து – திருச்செந்தூர் முருகன் ஆலயம், புது கல்லடி, திருப்பெருந்துறை – முத்துக்குமார வேலாயுத சுவாமி கோவில், குருக்கள் மடம் ஸ்ரீ செல்வக்கதிர்காமம் ஆலயம், கரைதீவு மாவடிக் கந்தசுவாமி கோவில், ஆரையம்பதி கந்தசுவாமி கோவில், கல்லடி வேலாயுத சுவாமி கோவில்), 5ஆவது இயல் (அம்மன் கோவில்கள் ஐந்து: மண்டூர் – மண்டூர் கோட்டைமுனை துறையடி மாரியம்மன் கோவில், திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதியம்மன் கோவில், துறைநீலாவணை கண்ணகி அம்மன் கோவில், தம்பிலுவில் கண்ணகை அம்மன் கோவில், நாவலடி ஸ்ரீ கடலாட்சியம்மன் ஆலயம், 6ஆவது இயல் (பொது: களுவாஞ்சிக்குடி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில், களுவாஞ்சிக்குடி ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் என்றவாறாக ஆறு இயல்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2387).