14099 வீரகத்தி விநாயகரும் கொல்லங்கலட்டிக் கிராமமும்.

அன்னபரிபூரணம் ஞானேஸ்வரன் (மலராசிரியர்). மாவிட்டபுரம்: வீரகத்தி விநாயகர் ஆலயத் தொண்டர்கள், கொல்லங்கலட்டி, 1வது பதிப்பு, 2017. (மல்லாகம்: ராம் பதிப்பகம், காங்கேசன்துறை வீதி). 81 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ. விநாயகர் வரலாறு, மாவிட்டபுரம், கொல்லங்கலட்டி வீரகத்திப் பிள்ளையார் கோவில் வரலாறு, கொல்லங்கலட்டி வீரகத்தி விநாயகர் ஆலய வளர்ச்சியில் சிவஸ்ரீ சண்முகானந்தக் குருக்களின் பங்கு, விநாயகப் பெருமான் அடிதொழுவோம், வீரகத்தி விநாயகருக்கு தேர்த்திருவிழா, எங்கள் பிள்ளையார், எழுச்சிமிகு எமது கிராமத்தின் ஒரு மீள்நோக்கு, எழில்மிகு திருவூர் எம்மூர் ஆகும், மறைந்தும் மனதில் மறக்கமுடியாதவர்கள், மாவை முதலியார், கொல்லங்கலட்டி, விநாயகர் திருவுருவின் தத்துவம், பிள்ளையாரும் கூட்டுப் பிரார்த்தனையும், மாவை கொல்லங்கலட்டி வீரகத்திப் பிள்ளையார் பேரில் பாடியவை, வீரகத்தி விநாயகர் திருவூஞ்சல், வீரகத்தி விநாயகனைப் பாடி மகிழ்வீர், வீரகத்தி விநாயகர் திருத்தல வெண்பா, மாவை கொல்லங்கலட்டி வீரகத்தி விநாயகர் துதி, ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல், ஸ்ரீ விநாயகர் நூற்றெட்டு நாமாவளி வழிபாடு, விநாயகர் கவசம் ஆகிய கட்டுரைகளினூடாக கொல்லங்கலட்டிக் கிராமம் பற்றியும் அஙகுள்ள வீரகத்தி விநாயகர் வரலாறு பற்றியும் பல்வேறு பிரமுகர்களாலும் இம்மலரில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மலராசிரியர் அன்னபரிபூரணம் ஞானேஸ்வரன் வலிகாமம் கல்வி வலயத்தின் முன்னாள் ஆசிரிய ஆலோசகராவார்.

ஏனைய பதிவுகள்

12469 – செழுந்தமிழச் சிகரம் சிறப்புமலர் ; 2003 (அகில இலங்கைத் தமிழ் மொழிழ் தினம்;).

சிறப்பு மலர்க்குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, மனிதவள அபிவிருத்தி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ.

12740 – கம்பராமாயணம் சுந்தரகாண்டம்: பகுதி 2-நிந்தனைப் படலம் (விளக்கவுரையுடன்).

செ.நடராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, சித்திரை 1979. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 B.A. தம்பி ஒழுங்கை). (4), 97-220 பக்கம், விலை: ரூபா

14731 வானம்பாடியும் ரோஜாவும்.

கெக்கிறாவ ஸுலைஹா. கெகிறாவ: கெக்கிறாவ ஸுலைஹா, 32/21, செக்குபிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xi, (3), 78 பக்கம், விலை: ரூபா 220., அளவு:

14389 வணிக புள்ளிவிபரவியல் : மாதிரி எடுப்பும் புள்ளிவிவர அனுமானமும்: க.பொ.த.உயர்தரம்.

பொன்னுத்துரை ஐங்கரன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை ஐங்கரன், இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). (4), 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,