வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: ஆலய பரிபாலன சபை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருத்தலம், வெல்லாவெளி, 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி). 150 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×19 சமீ., ISBN: 978-955-42694-6-0. வெல்லாவெளி, மட்டக்களப்பிலிருந்து தெற்கில் 30 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி ஆரம்பகால குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆரம்ப கால பிராமிச் சாசனங்களும், வாழ்விட தடயங்களும், பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களும் காணப்படுகின்றன. ‘வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும்” என்ற இந்நூல் காலத்தின் தேவையால் முகிழ்ந்த வெல்லாவெளிக் கிராமத்தின் வரலாற்றுப் பொக்கிசமாகும். அந்தக் கிராம மக்களின் சமூக வரலாற்று வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளதால் இந்த வரலாற்று ஆவணத்திற்கு உயிர்ப்பும் உணர்வும் உள்ளது.