14105 அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் மகாகும்பாபிஷேக சிறப்பு மலர்-2002

மலர்க் குழு. அளவெட்டி: கும்பழாவளைப் பிள்ளையார் (சந்திரசேகரப் பிள்ளையார்) ஆலயம், 1வது பதிப்பு, மார்ச் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48Bபுளுமெண்டால் வீதி). (36), 140 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், தகடுகள், விலை: அன்பளிப்பு, அளவு: 25.5×19 சமீ. அளவெட்டி, கும்பழாவளை பிள்ளையார் கோவிலின் புனராவர்த்தனப் பிரதிட்டா மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம். 01.02.2002 நடைபெற்ற கும்பாபிஷேகச் சிறப்பு மலர். மண்டலாபிஷேகப் பூர்த்திநாளான 21.03.2002 அன்று வெளியிடப் பெற்ற இம்மலரில், ஆசியுரைகள் வாழ்த்துரைகளுடன், விநாயகர் வழிபாட்டின் தொன்மை (சி.க.சிற்றம்பலம்), தென்-தென்கிழக்காசிய நாடுகளில் கணபதி வழிபாட்டு மரபும் தொன்மையும்: ஒரு வரலாற்று அறிமுகம் (செ.கிருஷ்ணராஜா), அறுகு அணிவதில் அகம் மிக மகிழும் ஆனைமுகன் (துரை.கணேசமூர்த்தி), விநாயகப் பெருமானின் திருக்கரங்களில் உள்ள பொருட்கள் (செல்லையா பரமேஸ்வரன்), விநாயக வழிபாடு (மு.செல்லையா), பிள்ளையார் பெருமையும் வழிபாடும் (வ.ஆறுமுகம்), ஓங்காரத்துள்ளிருந்து உலகாளும் விநாயகன் (கா.தியாகராஜ சர்மா), தேவர்கள் தொழுதேந்தும் தெய்வம்-கவிதை (மு.திருநாவுக்கரசு), தன்னை நினையத் தருகின்றான் (மங்கையற்கரசி திருச்சிற்றம்பலம்), அளவை கும்பழாவளைப் பிள்ளையாரின் திருக்குடமுழுக்குப் பெருவிழா- கவிதை (வை.க.சிற்றம்பலம்), கும்பழாவளையானின் குடமுழுக்குக் கண்டு எமது தேசம் விடிகிறது-கவிதை (எம்.பி.அருளானந்தன்), அளவெட்டி கும்பழாவளைக் கோமான் (இராசமூர்த்தி தியாகராஜா), எனது அனுபவத்திற் கண்ட கும்பழாவளையான் அற்புதங்கள் (சுபத்திரா விவேகானந்தன்), வல்லபை கணபதியின் வடிவம் (க.சௌந்தரராஜ ஐயர்), விநாயகரின் தோற்றப் பின்னணி (அம்பிகைபாகன்), ஸ்ரீ கும்பழாவளை விநாயகர் திருத்தல வரலாறு (அருட்கவி விநாசித்தம்பி), ஆலயத் திருப்பணியின் மகத்துவம் (க.நாகலிங்கம்), பிள்ளையார் வகைகள், முதல்வர் (தெய்வத்தின் குரல் இதழிலிருந்து), ஆலயத்தின் அமைப்பும் திருவுருவங்களும், சிவ பூஜா தத்துவம், கும்பபூஜை அக்கினி கார்யம் என்பவற்றின் விளக்கம், கட்டளைக் கலித்துறை- செய்யுள் (சோ.சிவப்பிரகாசம்), விபூதியின் சிறப்பு, அட்டபந்தனம், கும்பாபிஷேக மகிமை, கும்பாபிஷேக பலன், யாகங்களும் அதன் பயன்களும், விநாயகருக்குரிய விரதங்கள், கணபதி, விநாயக மகிமை, மாங்கனி பெற்ற மாமுகன் (சோ.குஹானந்த சர்மா), விநாயகரும் ஒளவையாரும் (மனோன்மணி நாகநாதன்), வேழமுகம் வெற்றிமுகம் (எஸ்.டீ.செல்லத்துரை), கந்தபுராணத்தில் விநாயகர் மான்மியம் (குமாரகுரு சுவாமி), கலசைச் செங்கழுநீர்: விநாயகர் பிள்ளைத்தமிழ் (வ.சிவராசசிங்கம்), பிறநாடுகளில் விநாயக வணக்கம் (நா.முத்தையா) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 034466

ஏனைய பதிவுகள்

12282 – பாதுகாப்பாக இருங்கள்.

எஸ்கேப் ஆசிரியர் குழு. தயா தியாகராஜா (தமிழாக்கம்). கொழும்பு: எஸ்கேப் (Escape) பிரசுரம், 25, வைத்தியசாலை வீதி, தெகிவளை 10350, 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: New Ferrine Printers).

12585 – கணிதம் ஆண்டு 4.

M.P.M.M.ஷிப்லி, கோ.கோணேசபிள்ளை (தமிழாக்கம்), ந. வாகீசமூர்த்தி, திருமதி ம.திருநாவுக்கரசு (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 2: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கல்வி அமைச்சு, மலாய் வீதி, 1வது பதிப்பு, மே 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xi,