14106 அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக மலர் ; 1990.

அம்பிகைதாசன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தவளக்கிரி முத்துமாரி அம்மன் பரிபாலனசபை வெளியீடு, நியு உதயன் பப்ளிகேஷன்ஸ், த.பெ.எண் 23, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432, காங்கேசன்துறை வீதி). xxviii, 100 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×18.5 சமீ. தவளக்கிரி முத்துமாரி அம்மன் பேரில் பாடிய திருப்பள்ளியெழுச்சி, மாரித்தாய் குடமுழுக்கு வைபவம் (தங்கம்மா அப்பாக்குட்டி), ஸ்ரீ முத்துமாரியம்மை தோத்திரம் (சீ.விநாசித்தம்பி), பெருங்கருணைத் தெய்வம் (நா.பார்வதிநாதசிவம்). அருள்கெழு மந்திரத்தால் அபிஷேகம் ஆடும்தாய் (மா.மாணிக்கம்), தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில் தலவரலாறு, உலகெங்கும் மாரி என்ற சக்தியின் நாமம் துலங்குகின்றது: மகாகவி பாரதியாரின் ஆய்வுரை, பெருஞ்சாந்தி விழா (இ.நவரத்தினக் குருக்கள்), லலிதா பஞ்சரத்தினம் (வி.சிவசாமி), சிவஞான போதத்திற்கு முன் சைவசித்தாந்தம் (வை.கா.சிவப்பிரகாசம்), கந்தபுராணத்தில் காசிபன் உபதேசமும் சுக்கிரனுபதேசமும் (நா.சுப்பிரமணியன்), அன்னையின் அருளும் வடிவும் (அ.சண்முகதாஸ்), மூலவர்க்கும் யாவர்க்கும் முதல்வி (க.சி.குலரத்தினம்), அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் (கனகசபாபதி நாகேஸ்வரன்), இரண்டு பாட்டுக்கள் (இ.முருகையன்), ஆலயத்தில் நிகழும் கும்பாபிஷேகமும் நாமும் (ப.கோபாலகிருஷ்ணன்), மாரி அம்மன் வழிபாடு (இ.பாலசுந்தரம்), பண்டைய ஈழத்தில் சக்தி வழிபாடு (சி.க.சிற்றம்பலம்), ஒரு காவோலையின் சலசலப்பு-சிறுகதை (அ.செ.முருகானந்தம்), பரிபாலன சபை அறிக்கை (கோ.இரத்தினம்), தொண்டர் சபை அறிக்கை (கு.கிருபாகரன்), அளவைநகர்- தவளகிரி ஸ்ரீ மகா முத்துமாரி அம்மன் திருவூஞ்சல் ஆகிய 22 படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8509).

ஏனைய பதிவுகள்