கணேசையர் சௌந்தரராஜன் சர்மா (தொகுப்பாசிரியர்). அனலைதீவு: நயினார்குளம் ஐயனார் ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, ஜுலை 2012. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி, சுன்னாகம்). x, 200 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. அனலைதீவு நயினார்குளம் கூழாவடி ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய இராஜகோபுர கும்பாபிஷேக சிறப்பு மலர் 31.07.2012 தேர்த்திருவிழா அன்று வெளியிடப்பட்டது. இம்மலரில் உள்ள ஆக்கங்கள் ஆசிச் செய்திகளும் வாழ்த்துச் செய்திகளும், ஆலய விடயங்களும் ஆய்வுகளும், ஐயனார் வழிபாடும் ஆய்வுகளும், இராஜகோபுரம், தோத்திரத் திரட்டும் அருட்பாக்களும் ஆகிய ஐந்து பிரிவுகளில் வகுத்துத் தரப்பட்டுள்ளன. ‘ஆலய விடயங்களும் ஆய்வுகளும்” என்ற பிரிவின்கீழ் அனலைதீவு-யாழ்ப்பாணம் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில் (வசந்தா நடராசன்), அற்புதம் செய்யும் அனலை ஐயனார் (மு.வே.மயில்வாகனம்), ஆலய அமைப்பின் தத்துவம் (சுதந்தினி ஸ்ரீமுரளிதரன்), ஆலயங்களும் அறப்பணிகளும் (தங்கம்மா அப்பாக்குட்டி), கோயில்களும் இன்றைய சைவர்களும் (நா.முத்தையா), சைவ சமயிகள் என்போர் யாவர்? (குமாரசாமி சோமசுந்தரம்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘ஐயனார் வழிபாடும் ஆய்வுகளும்” என்ற பிரிவில் கோடி புண்ணியம் (குருசாமி க.தம்பிராசா), ஐயனார் வழிபாடு (சி.தில்லைநாதன்), ஐயனார் வழிபாட்டின் தொன்மை (சி.பொன்னம்பலம்), சாத்தனும் அரிஹரபுத்திரனும் (வ.மகேஸ்வரன்), ஐயனாரும் ஐயப்பனும் – ஒரு நோக்கு (சிவலிங்கம் துஜியந்தன்), இலங்கை இந்துமதத்தில் ஐயனார் வழிபாடு (ஜெயமலர் தியாகலிங்கம்), தமிழில் பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் (வை. ரோகிணி), ஐயனார் வழிபாட்டு மரபு (செ.திருநாவுக்கரசு), ஐயனாரும் ஐயப்பனும் (அனலைதீவு சோ.நடராசா), சிவவழிபாடு (வே.சிவகரன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘இராஜகோபுரம்” என்ற பிரிவில் கோபுரமும் அதன் உட்பொருள் விளக்கமும் (கு.பிரபாகரக் குருக்கள்), இந்துக் கோயில் கோபுரங்கள் விமானங்கள் (ப.கணேசலிங்கம்), அனலைதீவு ஐயனார் ஆலய இராஜகோபுரத்தின் சிறப்பு (ப.லவன் பிரகலாத்) ஆகிய கட்டுரைகளும், ‘தோத்திரத் திரட்டும் அருட்பாக்களும்” என்ற இறுதிப் பிரிவில் சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பாடிய ஐயனார் அகவல், ஐயனார் காவியம் ஆகியவையும், அனலைதீவு ஐயனார் தோத்திரத் திரட்டு, ஐயனார் திருஊஞ்சல், ஐயனார் கவசம், கீர்த்தனைகள் ஆகியனவும் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20381).